Friday, July 24, 2026
Home > வகையற்ற > காதல் மட்டுமே…

காதல் மட்டுமே…

கனவில் கூட நினைக்கலயே…
காதலை நானும் மறக்கலயே…சுவைக்க சுவைக்க இனிக்கும் தேன்…
நினைக்க நினைக்க ததும்பும் காதல்…பிரிவு கசந்தது…
பொய் கிழித்து…
மன்னிக்க இயலாதது…
மனம் உடைந்தது,
விலகல் வலித்தது,
நினைவுகள் வளர்ந்தது,
மனம் கனிந்தது,
காதல் இனித்தது.
மெய் வென்றது…
உண்மைக் காதல் என்னும் மெய் வென்றாது…உன் மேல் நான் கொண்ட காதல் தோற்கவில்லையே…
என் மேல் நீ கொண்ட நம்பிக்கை காணக் கிடைக்கவில்லயே…

குறுகிய கால வெற்றிக்காக,
வாழ்நாள் இன்பம் தொலைத்தாயே…
வெற்றி வந்து குவிந்தது,
வாழ்க்கை தானே கசந்தது…
எதிர்த்து நின்றிருந்தால்,
இன்று உலகமே நம் காலடியில்…
காதலுக்கான சண்டையில்,
தோற்றது என்னவோ நாம் தானே…
பிரிவு தந்தது பாடம்,
அதற்கு பரிசாய், சேர முடியாத கோலம்…
நாம் எல்லோருக்கும் பாடம்,
ஆனால், நமக்குத் தானே என்றைக்கும் சோகம்…
என்னை பார்க்கவே முடியாது என்றாய்,
என் பார்வைக்காக இன்று தவமிருக்கிறாய்…
ரத்தம் முறுக்கேறி விரட்டினாய்,
என் ரத்தத்தில் பெற்றேடுக்க காத்துக்கிடக்கிறாய்…
அவசர அவசரமாய் முடிவெடுத்த உன் வேகம்,
மொத்தமாய் நம் வாழ்க்கையே சேதம்…
என்னிடம் போட்டாய் வேடம்,
முடிவில் கிடைத்து, கண்ணீர் மேகம்…
நீ விடாத சாபமா?
அது தான் என் வாழ்க்கையின் அலங்கோலமா…?
சம்மதம் தானே கேட்டேன்,
காதலை அல்லவா நீ பறித்தாய்…?
உண்மையை மட்டும் பேசியிருந்தால்,
நம் காதல் தானே வென்றிருக்கும்…?
நீ என்னை இழக்கவில்லை,
உன்னை நீயே இழந்துவிட்டாய்…
இன்று ததும்புது அடங்கா காதல்,
அன்று தெரிந்தது முழுவதும் மோதல்…
அன்றும்
இன்றும்
என்றும்
உன் மேல் நான் கொண்டது
காதல் மட்டுமே…
செவி கொடுத்து கேளடி,
நான் உன்மேல் கொண்டது,
காதல் மட்டுமே…

அவளை மீண்டும் பார்ப்பது,
நினைத்தே பார்க்காத செயல்…என நினைத்தேன்…
ஆனால்,
அவளை மீண்டும் பார்ததது,
நினைத்து நினைத்து பார்க்கும் நினைவானதே…

கேட்டும் கிடைக்காத உதவி…
அவளிடம் கேட்காமலே கிடைக்கும் பேருதவி…

அவளருகில் நானில்லை…
என்னருகில் அவளில்லை…
ஆனால்,
இருவர் மனமும் ஒரு மனமே…
உறவில் கலவி சேர்வதைவிட,
அவளுடன்… உணர்வில் கலவி சேர்வது பேரின்பமே…

அனுதினமும் அவளிடம் என் வேண்டுதல்…
உன் பக்கத்துல நான் படுக்க, வழி சொல்லம்மா…
உன் ரத்தத்தில பெற்றெடுக்க, விதி விடுமா…

பிறந்தநாள் கொண்டாடும் என்னவளே…
நம் மூலம் பிறக்கும்
எல்லா உயிர்க்கும்
சுவாசம் கிடைக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்…

அருகில் இருப்பது மட்டுமே காதலில்லையே…
எப்போதும் நினைவில் இருப்பது தான், காதலின் முழுமையே…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

ஜூலை 23, 2025

மாலை 07.23 மணி…

Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x