Saturday, April 27, 2024
Home > வகையற்ற

கேளாயோ கண்மணியே – #கவிதை

உடைந்த இதயம் உடையாத காதல் மலரும் நினைவுகள் மலராத நிஜங்கள் கேளாயோ கண்மணியே   நினைவில் மருவிய மோதல் கனவில் காவிய காதல் கேளாயோ கண்மணியே கண் தேடி கை தீண்டி விரல் கோர்த்து நான் இருக்கிறேன் நான் இருப்பேன் இனியும் கரைந்துப்போன சீரிய உறவு மறைந்துப்போன பெரிய கனவு கேளாயோ கண்மணியே   எது எனது எது உனது அறியாமல் நமதாய் கரைந்த காலங்கள் கேளாயோ கண்மணியே   ஆனந்தம் பிறந்த நாட்கள் கவலைகள் இறந்த நாட்கள் பிரிவும் இறப்பும் இருவரும் சேர்ந்து சந்தித்த நாட்கள் கேளாயோ கண்மணியே   இசை உருவாக இசையின் உருவாக நீ ஆக இசையே நீ ஆக இசை எங்கும் ஆக நீ எங்கும் ஆக கேளாயோ கண்மணியே காற்றோடு இணைந்து உலகத்துடன் உருண்டு மேகத்துடன் சுழன்று இணைந்தே வாழ்வோம் சேராமல் போனாலும் கேளாயோ

Read More

கருப்புதேவதை – #சிறுகதை

அன்று வழக்கம்போல உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுவிட்டு நானும் ரியாசூம் கிருஷ்ணனுக்காக காத்திருந்தோம். எங்களது உடற்பயிற்சி கூடத்திற்கு அருகே ஒரு தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. கிருஷ்ணன் அங்கே தான் வேலை செய்கிறான். அந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாகியின் மேலாளராக பணியாற்றுகிறான். நாங்கள் மூவரும் ஒன்றாக முதுநிலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ) ஒன்றாக படித்தோம். நானும் ரியாசூம் தொழிலுக்கு வந்துவிட்டோம், ஆனால் கிருஷ்ணன் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சிபெற்று இங்கே

Read More

என் மீது தான் எத்தனைக் கண்கள்… – #கவிதை

வெற்றிவாகை சூடினேன் குத்துச்சண்டையில்... பேருந்தில் ஏறினேன் ஊருக்கு திரும்பும் வேளையில்... பயணக்களைப்பில் கண் அயர்ந்தேன்... விளித்துப் பார்த்தால்... என் மீது தான் எத்தனைக் கண்கள்...   பெண்ணாய் பிறந்தது என் தவறா? முலைகள் இருப்பது என் தவறா? விடிவான இடுப்பு என் தவறா? மாநிறமாய் இருப்பது என் தவறா? தவறேதும் நான் செய்திராமல்... என் மீது தான் எத்தனைக் கண்கள்...   குத்துச்சண்டை மாணவிதான்... கையால் குத்தவந்தால் தடுத்திடலாம்... வார்த்தையால் குத்தினாலும் திருப்பி கொடுத்திடலாம்... ஆனால்... பார்வையால் குத்தும் காமூகர்களை... என்ன செய்ய... நான் என்ன செய்ய... பள்ளி மாணவன் முதல் பல்லுபோன கிழவன் வரை... என் மீது தான்

Read More