ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் நண்பா…
உனக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளில்லை…
அழுகிறேன்…
ஆண் மகனை ஈன்றெடுத்து…
கையில் தூக்கி வைத்து கொஞ்ச கூட முடியாமல்,
சில நிமிட பார்வைக்காக, நாள்முழுதும் காத்துக்கிடந்த…
தாயை நினைத்து அழுகிறேன்…
உன்னைக்காக்க…
உன் உயிர்காக்க போராடிய
என் நண்பனை நினைத்து அழுகிறேன்…

அன்று… வீரன் என்று விளையாட்டாய் அழைத்தேன்…
இன்று… வீரனாகவே வாழ்க்கையோடு போரிட்டு மறைந்தான்…
நாம் யாரும் தாங்காத வலிகளை தாங்கி மறைந்தான்…
அன்னையில் அரவனைப்பைக்கூட காணாது மறைந்தான்…
தந்தையின் அன்பை காணாது மறைந்தான்…
அண்ணனின் பாசம் காணாது மறைந்தான்…
இறுதி வரை அயராது போராடி மறைந்தான்…
அவன் வலியுடன் போராடும் நிலைக்காணாமல், அவன் வீழ்வதே மேல் என்று நினைக்க வைத்து மறைந்தான்…
ஐயோ…
மீண்டு வர வழியில்லையெனில், மரணமே மேல் என நினைக்கவைத்து மறைந்தான்…
அவன் வீரன்…
அவன் அடைந்தது வீர மரணம்…
இனி அவன் உறங்கட்டும் வலியில்லாமல்…
அவன் வலியை நாம் தாங்கிக்கொள்வோம்…
போய் வா வீரா…இந்த உலகைவிட்டு…
நினைவிருப்பாய்…
எங்களுள் நிறைந்திருப்பாய்…
எங்கள் உயிருள்ள வரை…
வீரனுக்கு புகழஞ்சலி…
வாழ்க வாழ்க வீரா…
இனி என்றென்றும் எங்கள் நினைவுகளில்…
– உ.கா.
அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை…
ஜூலை 31, 2025
இரவு 11.38 மணி…
