Saturday, March 7, 2026
Home > கவிதை > தனியாய் இங்கே சாக… – #கவிதை

தனியாய் இங்கே சாக… – #கவிதை

புயலாய் தேடி வந்தாள்…
பாச மழையாய் கொட்டித் தீர்த்தாள்…
அவளில்லாமல் காயமாய் இருந்த மனதை,
அன்பால் நிறைத்தாள்…
இனி வாழ்நாளும்…
எந்நாளும்…
எந்நிலையிலும்…
என்னுடனே இருப்பேன் என்றாள்..
ஏனோ…
என் மீது இவ்வளவு பாசம் வைக்கிறாள்…
ஆனால்…
மீண்டும் என்னைவிட்டுச் சென்றாள்…

என்னை விட்டுச் செல்வதில் அவளுக்கு,
அவ்வளவு இன்பமெனில்…
அவள் என்னை ஆயிரம் ஆயிரம் முறை
விட்டுச் செல்லட்டும்…
என்னை அவள்
ஒவ்வொருமுறை விட்டுச் செல்லும் வேளையிலும்,
பெரின்பம் காண்பாய் எனில்,
அடி பெண்ணை
என்னை ஆசை தீர விட்டுச் செல்லடி பெண்ணே…
அது எத்தனை முறையானாலும்…
காயம் என்னோடு…

சூரியன் உதிக்க மறக்கலாம்…
நதிகள் ஓட மறக்கலாம்…
அலைகள் அடிக்க மறக்கலாம்…
இலைகள் காற்றில் ஆட மறக்கலாம்…
பிஞ்சிக் குழந்தை தாய்ப்பாலை மறக்கலாம்…
குயில் கூவ மறக்கலாம்…
குதிரைகள் ஓட மறக்கலாம்…
நெருப்பு எரிய மறக்கலாம்…
அப்போதும்
என் நினைவில் சிம்மாசனமிட்டு அமர்ந்திப்பாள்…
என் மகாராணியாய்…

ஒவ்வொரு நொடியும், அவள் நினைவில்…
ஒவ்வொரு நொடியும், அவள் நினைவோடு…
ஒவ்வொரு நொடியும், அவள் அன்புக்காக…
ஒவ்வொரு நொடியும், அவளுக்காக…
அன்றும்
இன்றும்
என்றேன்றும் காத்திருப்பேன்…
அன்பே நான் காத்திருப்பேன்…
உனக்காக காத்திருப்பேன்…
என்னைவிட்டுச் செல்லாதே…
நான் கிடக்கிறேன், தனியாய்… இங்கே சாக…
என்னைவிட்டுச் செல்லாதே…
தனியாய் விட்டுச் சாக…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

ஆகஸ்டு 06, 2025

காலை 02.12 மணியில்…