Saturday, March 7, 2026
Home > கவிதை

தனியாய் இங்கே சாக… – #கவிதை

புயலாய் தேடி வந்தாள்... பாச மழையாய் கொட்டித் தீர்த்தாள்... அவளில்லாமல் காயமாய் இருந்த மனதை, அன்பால் நிறைத்தாள்... இனி வாழ்நாளும்... எந்நாளும்... எந்நிலையிலும்... என்னுடனே இருப்பேன் என்றாள்.. ஏனோ... என் மீது இவ்வளவு பாசம் வைக்கிறாள்... ஆனால்... மீண்டும் என்னைவிட்டுச் சென்றாள்... என்னை விட்டுச் செல்வதில் அவளுக்கு, அவ்வளவு இன்பமெனில்... அவள் என்னை ஆயிரம் ஆயிரம் முறை விட்டுச் செல்லட்டும்... என்னை அவள் ஒவ்வொருமுறை விட்டுச் செல்லும் வேளையிலும், பெரின்பம் காண்பாய் எனில், அடி பெண்ணை என்னை ஆசை தீர விட்டுச் செல்லடி பெண்ணே... அது எத்தனை முறையானாலும்... காயம் என்னோடு... சூரியன் உதிக்க மறக்கலாம்... நதிகள் ஓட மறக்கலாம்... அலைகள் அடிக்க மறக்கலாம்... இலைகள் காற்றில்

Read More

காதல் பரிசு – #கவிதை

அவனை சிரிக்க வைப்பது காதல் பரிசா? இல்லை... அவனுடன் கைகோர்த்து மணமுடிப்பதே காதல் பரிசா? இல்லை... அவனைவிட்டு பிரிந்தது காதல் பரிசா? இல்லை... அவன் தந்த வலிகள் காதல் பரிசா? இல்லை... அந்த காதல் பரிசு தான் என்னவோ? என்னுள் இருக்கிறது ஆயிரம் ஆயிரம் வலிகள்... அவனிடம் சொல்வதை தடுக்க தேடுகிறேன், ஆயிரம் ஆயிரம் வழிகள்... வழி கிடைக்காமல், என் வலிகளை சொன்னால்... என் வழி குறையலாம்... ஆனால்... என்னை நினைத்து நினைத்து அவன் துடிப்பானே... வழி தெரியாமல்... வலியால்... என் வலி என்னோடு... அவன் வழி நானல்லவே... அவனுக்கு நல்வாழ்க்கை வேண்டியே, நான் அவனை இழந்தேன்... என் நல்வாழ்க்கை வேண்டியே, அவன்

Read More

காதல் ஒர் தொடர்கதை… -#கவிதை

காதல் முடிவது காமத்தில்... காமம் முடிவது காதலில்... இரண்டும் முடிவது பிரிவில்... பிரிவு முடிவது...? காதலில்... ஆம்... மீண்டும் ஓர் காதலில்...   காதலர்களுக்குத் தானே... என்றும் முடிவுரை... காதல் என்றென்றும்... முடிவில்லா ஒர் தொடர்கதை... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஆகஸ்டு 31, 2024 இரவு 10.08 மணி… நான் அவனுக்காக விட்ட கண்ணீரை விட... அதிகம்... அவன் எனக்காக... என்னை நினைத்துவிட்ட கண்ணீர்...   தண்டித்தேன் அவனை... துண்டித்தேன் அவனை... ஆனால் அவனோ... மன்னித்தான் என்னை... அவனை பிரிந்ததற்காக.... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஆகஸ்டு 31, 2024 இரவு 10.30 மணி…

Read More

அவன் என்னவன்… – #கவிதை

அவன் காதலை ஏற்றுக்கோள்வோம் என்று நினைத்ததில்லை... அவனை ஏன் பிடித்திருக்கிறது என்று சொல்ல முடியவில்லை... அவன் வருகைக்காக ஏன் இப்படி காத்திருந்தேன் என்று புரியவில்லை... அவனை காணாத நாட்களில் வரும் அழுகையை கூட துடைத்ததில்லை... அவன் எனக்கானவன் என்பதில் துளியும் சந்தேகமில்லை... அவன்... அவன்... அவன்... அவன் என்னவன்... ஆனால்...   அவனுக்காக என் பெற்றோரை விட்டுவிலக மனமில்லை... அவனுக்காக என் வீட்டில் நான் உறுதியாய் போராடவில்லை... அவனுக்காக என் வீட்டாரை கூட சமாளிக்க இயலவில்லை... அவனில்லா... ஓர் வாழக்கையை நினைத்துப் பார்த்ததேயில்லை... அவனில்லா... துடிக்கும் என் இதயத்தை யாரும்

Read More

கேளாயோ கண்மணியே – #கவிதை

உடைந்த இதயம் உடையாத காதல் மலரும் நினைவுகள் மலராத நிஜங்கள் கேளாயோ கண்மணியே   நினைவில் மருவிய மோதல் கனவில் காவிய காதல் கேளாயோ கண்மணியே கண் தேடி கை தீண்டி விரல் கோர்த்து நான் இருக்கிறேன் நான் இருப்பேன் இனியும் கரைந்துப்போன சீரிய உறவு மறைந்துப்போன பெரிய கனவு கேளாயோ கண்மணியே   எது எனது எது உனது அறியாமல் நமதாய் கரைந்த காலங்கள் கேளாயோ கண்மணியே   ஆனந்தம் பிறந்த நாட்கள் கவலைகள் இறந்த நாட்கள் பிரிவும் இறப்பும் இருவரும் சேர்ந்து சந்தித்த நாட்கள் கேளாயோ கண்மணியே   இசை உருவாக இசையின் உருவாக நீ ஆக இசையே நீ ஆக இசை எங்கும் ஆக நீ எங்கும் ஆக கேளாயோ கண்மணியே காற்றோடு இணைந்து உலகத்துடன் உருண்டு மேகத்துடன் சுழன்று இணைந்தே வாழ்வோம் சேராமல் போனாலும் கேளாயோ

Read More