Saturday, March 7, 2026
Home > கவிதை > காதல் பரிசு – #கவிதை

காதல் பரிசு – #கவிதை

அவனை சிரிக்க வைப்பது காதல் பரிசா?
இல்லை…
அவனுடன் கைகோர்த்து மணமுடிப்பதே காதல் பரிசா?
இல்லை…
அவனைவிட்டு பிரிந்தது காதல் பரிசா?
இல்லை…
அவன் தந்த வலிகள் காதல் பரிசா?
இல்லை…
அந்த காதல் பரிசு தான் என்னவோ?

என்னுள் இருக்கிறது ஆயிரம் ஆயிரம் வலிகள்…
அவனிடம் சொல்வதை தடுக்க தேடுகிறேன்,
ஆயிரம் ஆயிரம் வழிகள்…
வழி கிடைக்காமல், என் வலிகளை சொன்னால்…
என் வழி குறையலாம்…
ஆனால்…
என்னை நினைத்து நினைத்து அவன் துடிப்பானே…
வழி தெரியாமல்…
வலியால்…
என் வலி என்னோடு…
அவன் வழி நானல்லவே…

அவனுக்கு நல்வாழ்க்கை வேண்டியே,
நான் அவனை இழந்தேன்…
என் நல்வாழ்க்கை வேண்டியே,
அவன் என்னை இழந்தான்…
இருவரின் காதலுக்கு இழப்பே இல்லையே…
இழந்தது இருவர் வாழ்க்கையும் தானே…
அவன் மீண்டுவிட்டான்
நான் தேங்கிவிட்டேனே…

அவன்
என் வாழ்வின்
பெரும் பரிசு…
அவன்
என் வாழ்வின்
ஒளிவிளக்கு…
அவன் தந்த எல்லா நினைவுகளும்
எனக்கு அவன் கொடுத்த காதல் பரிசு…
காதலையே பரிசளித்தான்…
ஆனால் நான் அவனுக்கு தந்த பரிசு,
வலியுள்ள நினைவுகள் தானே…

நினைவுகள் கொடுத்த வலியில்…
கண்ணீர் கடலெடுக்க…
அதில் நீந்துகிறேன்…
மேலும் மேலும் கண்ணீருடன்…
அவன் கொடுத்த நினைவுகளுடன்….
அவன்…
வாழ் வேண்டும்…
வாழ்க வாழ்க வாழ்கவே…
என் அன்பே…
இந்த பிறந்தநாளில் மட்டுமல்ல…
எல்லா நாட்களில் உன்னை மட்டுமே நினைவு கூறுகிறேன்…
என் அன்பே…
நீ…
வாழ்க வாழ்க வாழ்கவே…
என் அன்பே…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

ஜூலை 23, 2025

காலை 06.23 மணி…