Saturday, April 27, 2024
Home > கவிதை > கேட்கிறேன் பாவமன்னிப்பு… மணிப்பூருக்காக – #கவிதை

கேட்கிறேன் பாவமன்னிப்பு… மணிப்பூருக்காக – #கவிதை

ஆடையில்லாமல் ஓடவிட்டார்கள்…

ஜாதியின் பெயராலும், இறைவனின் பெயராலும்…

தடுக்க வரவில்லை…

இராமனும்…

அல்லாவும்…

ஏசுவும்…

ஆயிரம் ஆயிரம் வக்கிரம் கொண்ட கண்கள் ரசித்திருக்கும்…

அந்த பெண்களின் அந்தரங்கங்களை…

ஆனாலும்

கோடிக்கணக்கான மனங்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் உலகெங்கும்…

நடந்ததை நினைத்து நினைத்து வருந்தியிருக்கும்…

கண்ணில்லாமல் போனது அரசுக்கு…

கலவரம் தேவையாய் இருந்தது ஆட்சிக்கு…

இது தவறென்றே தெரியாமல் போனது மனித அறிவிற்கு…

போகிறதே மனிதகுலம் அழிவிற்கு..

யாரெல்லாம் பொறுப்பு கலவரமான செயலுக்கு…

களங்கமே ஏற்ப்பட்டதே இந்திய நாட்டின் புகழுக்கு…

இனி கிடைக்குமா மரியாதை இந்தியர் என்னும் பெயருக்கு…

ஏன் என்ற கேள்விக்கு?

இராமனுக்கு…

அல்லாவிற்கு…

ஏசுவிற்கு…

ஜாதிக்கு…

என்கிறார்கள் மனசாட்சியேயில்லாமல் இன்றைக்கு…

மனித செயலுக்கு இறை பக்தியே காரணம் என்கிறார்கள் நமக்கான தகவலுக்கு…

இனியாவது கிடைக்குமா நியாயம், மக்கள் விட்ட உயிருக்கு…

என்றாவது கிடைக்குமா நியாயம், தன்மானம் இழந்த மகளிருக்கு…

பதிலேதும் சொல்லுமா அரசு இந்த மனித பயங்கரவாதத்திற்கு…

யாரு தான் விடைக்கான போகிறார்கள் மனிதனின் கண்ணீருக்கு…

மனிப்பூரின் மங்கைளே…

இந்திய திருநாட்டின் குடிமக்களே…

உங்களுக்கு உதவ முடியாமல்

மனதிற்குள்ளாக புழங்கும்

கோடிக்கணக்கான நன்மக்களின் சார்பாய்,

உங்களிடன் கேட்கிறேன்

பாவமன்னிப்பு…

நிச்சயம் சொல்கிறேன்…

கலவரங்கள் அடங்கும்…

இயல்புவாழ்க்கை திரும்பும்…

துன்பங்கள் நீங்கும்…

இந்திய திருநாட்டின் நன்மக்களும்…

இந்திய திருநாடும்…

உங்களுக்கான நீதியை

நிச்சயம் வழங்கும்… வழங்கும்… வழங்கும்…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்…

நீ… என் நினைவிருக்கும் வரை

ஜூலை 23, 2023.

மாலை 7:31 மணி…