Monday, April 29, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 27

ஒண்ணுமில்ல… பகுதி 27

இருபத்திஆறாவது பகுதியின் லிங்க்…

கடைசியாக அந்த விசயத்திற்கு வந்தார் சூசன்.

அது என்னவென்றால், அந்த ஹெச்.ஆர் மீது பலர் புகார் தெரிவித்திருப்பதால், அவனை நிறுவனத்தை விட்டு நீக்குவது என்று மேல் மட்ட நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது என்றார். மேலும், காவல்துறையில் நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டு, அவன் கைது செய்யப்பட்டிருக்கிறான் என்று சொன்னார்.

“ஹோப் ஜுஸ்டிஸ் வில் பீ செர்வுட்” என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“தேங்க் யூ சூசன்” என்று மட்டும் சொன்னேன்.

“ஐ கேனோ தட் யூ வில் பீ ஸ்டிரஸ்ட். டேக் எ வீக் ஆப். அண்டு ரிப்போட் டூ மீ ஆன் ஏப்ரல் 29.2019 மண்டே. டுடே இஸ் ஏப்ரல் 19. டேக் திஸ் டை டூ மூவ் டூ நியூ ஹோம், கம் பேக் ஸ்டிராங்கர் மை டியர் தேவி” என்று சொல்லிவிட்டு போனைத் துண்டித்தார்.

என்ன நடக்கிறது, என்ன நடந்தது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த ஹெச்.ஆர் மேல் ஏற்கனவே சூசன் செம காண்டில் இருப்பது தெரியும். அதே சமயம் இன்னும் சிலரும் அவனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சூசன் சொன்ன பொழுது, அந்த ஹெ.ஆர் நாய் மேல் எனக்கு கோவம் கோவமாக வந்தது.

கார்பரேட் ஆபிஸ் பாலிடிக்ஸில் இன்று அந்த ஹெச்.ஆர் பலிகாடு ஆக்கப்பட்டிருக்கிறான். அவனால் இனி நிறுவனத்திற்கு எந்த நன்மையிம் இருந்திருக்காது, அதனால், அவனை எளிதாக சாய்த்துவிட்டார்கள். இல்லையென்றால் புகார் கொடுத்த நான் தான் அவமானப்படுத்தப் பட்டிருப்பேன் என்பதனை நான் உணர்ந்தேயிருக்கிறேன்.

ஒரு பெண்ணாக சூசன் எனக்கு உதவி செய்தது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஆனால அவர் சும்மா ஒன்றும் செய்துவிடவில்லை. இந்த புராஜெக்ட் வெற்றிகரமாக டிப்லாய் செய்யப்பட்டால் அவருக்கும், டீமில் இருக்கும் சிலருக்கும் ஐந்து வருடங்களுக்கு லண்டன் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி இந்த புராஜெக்ட் வெற்றிப்பெற வேண்டுமானால், அவருக்கு சில நல்ல ரிசோர்ஸ் தேவைப்படுகிறது (அதான் பா.. நல்லா வேலை செய்யறவங்க…) நானும் சூசனுக்கு ஒரு மிக முக்கியமான ரிசோர்ஸ். என்னை இழக்க அவர் விரும்பவில்லை. அதனால் தான் இந்த மெனக்கெடல் என்று எனக்கு தெரியும்.

இந்தக் கார்பரேட் உலகைக் கண்டு எனக்கு வெறுமையாக வந்தது. ஆனாலும், அங்கே கிடைக்கும் புகழுக்கும், மரியாதைக்கும் நான் அடிமையாகிவிட்டதால், அதிலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை. வேறு நல்ல வாய்ப்பு வந்தால் இதை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு ஓடிவிடுவேன். என் ஆசையே என் நாட்டு பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என்பதே. நல்லதொரு வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.

மணியைப் பார்த்தேன். ஒன்பதைத் தாண்டியிருந்தது. நான் தினமும் சரக்கு அடிக்கும் நேரமிது, இன்றைய நாள் எனக்கு மிக மிக மோசமாக அமைந்ததால், எனக்கு இன்று என்னவோ எனக்கு பீர் குடிக்கத் தோன்றவில்லை. வோட்கா குடிக்கத் தோன்றியது. இன்றைய நாளை மறக்க எனக்கு வோட்காவின் போதை தேவைப்பட்டது.

என் தலைமுடியை கொண்டையிட்டுக் கொண்டேன்.

எனக்குப் பிடித்த கிளாசிக் மெந்தால் சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தேன். ஒரு இழுப்பு இழுத்தேன். என் கோவங்களை எல்லாம் புகையாக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. தோற்றுப் போனேன்.

அறையில் இருந்த சோபாவில் அமர்ந்தேன், வோட்கா பாட்டிலுடன். இன்று ரொம்பவும் பிடித்த அப்ஸலுயூட் ராஸ்பெரி ஃபிளேவரை குடிக்க எடுத்தேன். இது ஜாம் மாதிரி இருக்கும். கொஞ்சம் லெமனும், சோடாவும் கலந்து குடித்தால் சொர்கத்தை பார்க்கலாம். ஒரு கையில் வோட்கா, இன்னொரு கையில் சிகரெட். டிவியில் எனக்கு பிடித்தப் பாடல்கள் ஒடிக்கொண்டிருந்தன.

ஒரு ஃபுல் பாட்டிலையும் காலி செய்துவிட்டேன். எத்தனை சிகரெட் புகைத்தேன் என்றே தெரியவில்லை. போதை தலைக்கு ஏறி, சோபாவிலேயே உறங்கிவிட்டேன்.

இருபத்திஎட்டாவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு