Monday, April 29, 2024
Home > தயா-திவ்யா

அடுத்தது என்ன…

அப்போது... “ரியாஸ்... ரியாஸ்” என்று தயாவின் குரல் கேட்டது. போலிஸ் வண்டிக்கு அருகில் இருந்த நான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். தயா குத்துக்கல்லாக எங்களை நோக்கி ஆம்புலன்ஸிலிருந்து வந்துக்கொண்டிருந்தான். அவன் உடலில் இருந்த இரத்தம் காய்ந்திருந்தது. அவன் அடிப்பட்ட தன் வண்டியிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தைக் கழுவினான். ஒரு பாட்டில் தண்ணீரை அப்படியே தன் தலையில் ஊற்றினான், உடலில் இருந்த இரத்தக்கறை எல்லாம் போய்விட்டது. வண்டியிலிருந்து புதிய சட்டையை எடுத்து உடுத்திக்கொண்டு

Read More

அவன் கண்களில் நான்…

கடும் கோபத்துடன் இருந்த தயாவை ரியாஸும், பானுவும் சமாதனப் படுத்திக்கொண்டிருந்தனர். எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டுமென ஏன் இவர்கள் இருவரும் இப்படி போராடுகிறார்கள் என எனக்கு புரியவில்லை. என்னைப் பார்க்க வருவதை தயாவிடன் சொல்லாமல், அவனை அழைத்து வந்தது தான் பிரச்சனை என்று புரிந்தது. ஆனால், அதற்கு என் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று எனக்கு தெரியவில்லை. அப்போது தான் முதன் முதலில் அவன் கண்ணைப் பார்த்தேன். அதிலே ஒரு

Read More

அவள் பார்த்த பார்வையில்…

என் ஆரூயிர் நண்பன் ரியாஸ், புதிய நாட்டுக்கோழிப் பண்ணை துவக்கினான். சேலம் சோனா காலேஜில் எம்.பி.ஏ படிக்கும் பொழுதே நாட்டுக்கோழி பண்ணை வைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பான். பண்ணை திறப்பு விழாவிற்கு என்னை அழைத்திருந்தான்.  மேய்ச்சல் கோழிகளாய் வளர்க்க வேண்டி, கோழிப்பண்ணையை அதற்கு ஏற்றார் போல தயார் செய்து இருந்தனர். கோழிப்பண்ணை சேலத்திலிருந்து ஆத்தூர் செல்லும் வழியில் இருந்தது. விருந்தெல்லாம் முடித்துவிட்டு, கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தேன். எனது முந்நாள் இந்நாள் எந்நாள் காதலி

Read More