Saturday, March 7, 2026
Home > #கவிதை (Page 6)

பெண்கள் தினமாம்… – #கவிதை

பெண்கள் தினமாம்... பெண்கள் தினமாம்... ஆண்டுதோறும் கேலிக்கூத்தான வியாபாரமாக மாறிவிட்ட பெண்கள் தினமாம்... பெண்ணிற்கு அந்த ஒரு நாள் மட்டும் தான் கொண்டாட்டமா? மற்ற எல்லா நாட்களிலும் பெண்ணிற்கு என்ன திண்டாட்டமா? பெண்ணிற்கு தனியாக தினம் வைத்துக் கொண்டாடும் சமூகமே... பெண்ணிற்கு என்று... எப்போது தரப்போகிறாய்... பாதுக்காப்பை...? எப்போது தரப்போகிறாய்... உடல் சுதந்திரத்தை...? எப்போது தரப்போகிறாய்... பெண்ணுரிமை...? எப்போது தரப்போகிறாய்... உண்மையான சொத்துரிமை...? எப்போது தரப்போகிறாய்... வாழ்க்கைத்துணைத் தேர்வுரிமை...? எப்போது தரப்போகிறாய்... அரசியலுரிமை...? எப்போது தரப்போகிறாய்... முழு சுதந்திரம்...? அதுவரை... வேண்டாமே ஆண்டிற்கொரு முறை பெண்கள் தினம்... எப்போதும் வேண்டாமே... ஆணிற்கென்று தனியொரு தினம்... ஆண் பெண்ணாக முடியாது... பெண் ஆணாகவும் முடியாது... ஆனாலும்

Read More

அது தான் காதல் – #கவிதை

கெஞ்சினாலும் வராது... கொஞ்சினாலும் வராது... மிரட்டினாலும் வராது... மயக்கத்தினாலும் வராது... கத்தினாலும் வராது... கதறினாலும் வராது... பேசினாலும் வராது... பேசாவிடினும் வராது... பார்த்தாலும் வராது... பார்த்துக்கொண்டேயிருந்தாலும் வராது... பார்க்காவிட்டாலும் வராது... அது... வருவதும் தெரியாது... அது... வந்ததுக் கூட தெரியாது... அது... வருவதைத் தடுக்கவும் முடியாது... அது... வருவதைத் தவிர்க்கவும் முடியாது... அது... போவதையும் தடுக்க முடியாது... அது... போனால் போனது தான்... அதனைக் காக்கவும் முடியாது... அதனைக் காப்பாற்றவும் முடியாது... அது... சொல்லிவிட்டும் போகாது... அது... சொல்லிவிட்டும் வராது... அது தான் காதல்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… மார்ச் 07, 2020 காலை 09.48 மணி…

Read More

அழைத்துவிடாதே… உன் திருமணத்திற்கு… – #கவிதை

தினமும் கனவொன்று காண்கிறேன்... அந்தக் கனவிலே... என் கையில்... நமது செல்லப் பெண் குழந்தையிருக்கிறது... உன்னை மருத்துவமனையினுள் அழைத்துச் செல்கின்றனர்... இரண்டாவது பிரசவத்திற்கு... என் முகமெல்லாம் கவலை ரேகைகள்... சில நிமிடங்களில்... கையில் தவிழும் ஆண் குழந்தையுடன்... வருகிறாள் ஒரு செவிலியர்... நம் மகன்... உன்னைப் பார்க்க என்னை உள்ளே அனுமதிக்கிறார்கள்... நீ பிரசவம் முடிந்து உறங்கிக் கொண்டிருக்கிறாய்... என் கண்ணே... உன் உச்சந்தலையில் முத்தமொன்று தருகிறேன்... அந்த நொடியில்... விழித்துக்கொள்கிறேன்... நான்... தினமும் இதே இடத்தில்... தினம் தினம் இதே கனவு என்னை எழுப்பிவிட்டு விடுகிறது... ஆழ்ந்த உறக்கத்திலிருந்து... கனவுலகிலே... உன்னை என் பொண்டாட்டியாய் நினைத்து வாழ்ந்துவிட்டேன்... குடும்பமே நமக்கு இருக்கிறது

Read More

அடியே நான் என்ன செய்ய – #குட்டிகவிதை

நீ என்னை மறுக்க மறுக்க... எனக்கு இன்னும் இன்னும் உன்னைப் பிடிக்கிறதே... என்ன செய்ய... அடியே நான் என்ன செய்ய... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… பிப்ரவரி 25, 2020 மாலை 07.30 மணி…

Read More

ஏன் பிடிக்கிறது உன்னை… -#கவிதை

ஏன் உன்னைப் பிடித்திருக்கிறது எனக் கேட்கிறாய்? எனக்கே இந்தக் கேள்விக்கு பதில் தெரியாதபொழுது... நான் எப்படியடி சொல்வேன் உனக்கு பதிலை... உனக்காக முயற்சி செய்கிறேன்... கேட்டுக்கொள்ளடி என் கண்ணே...   உன் கண்கள் எனக்குப் பிடிக்கும்... சிரிக்காமல் சிரிக்கும் உன் உதடுகள் எனக்குப் பிடிக்கும்... உனது புருவத்தின் அழகு பிடிக்கும்... ஏதேனும் கேள்வி கேட்கையில் உயரும் அந்தப் புருவம் இன்னும் பிடிக்கும்... உன் மேலே நீ வரைந்துக் கொள்ளும் கோளங்கள் பிடிக்கும்... உன் பெயரை உன் கையில் எழுதி வைத்திருப்பது பிடிக்கும்... நான் கண்டுவிட்டால், அதனை நீ

Read More