Saturday, March 7, 2026
Home > #கவிதை (Page 4)

வாழ்நாள் காதலாய்… – #கவிதை

இவ்வுலகைவிட்டுப் பிரிந்துவிட்டாய்... என்னை தவிக்கவிட்டுச் சென்றுவிட்டாய்... உன் மேல் சத்தியம் செய்துவிட்டேன்... உன்னிடம் வாக்கு ஒன்றைக் கொடுத்துவிட்டேன்... இல்லாதிருந்தால்... நீ போன இடத்திற்கே... உன்னுடனே வந்திருப்பேன்... உன் முகத்தை மறக்கவே நினைக்கிறேன்... ஒவ்வொரு நாளும்... ஆனால்... உன் நினைவில்லாமல் கழிய மறுக்கிறது... ஒவ்வொரு நொடியும்...   உன்னை நினைக்காத நாளில்லை... நீயில்லாமல் நான் நானாகயில்லை... அன்று உன் உடலிலே உயிரில்லை... எனக்கு அன்று முதல், ஏனோ நிம்மதியில்லை... நீயில்லாத உலகில் வாழ என்னால் ஏனோ முடியவில்லை... நீ மறைந்தபின்னே எதிலும் ஏனோ எனக்கு நாட்டமில்லை... மரணத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்காத நாளுமில்லை... ஆனால்... கடவுளுக்கு அதனைக் கொடுக்க ஏனோ மனமில்லை... இப்பிரிவை ஏற்றுக்கொள்ள ஏனோ எனக்கு சக்தியில்லை... உன்னைப் பிரிந்த எனக்கு

Read More

கனவு உருமாற… செயல் மனதார…

கனவிலிருக்கும் வீச்சு... நினைவில் இல்லை... நினைவிலிருக்கும் வீச்சு... உணர்வில் இல்லை... உணர்விலிருக்கும் வீச்சு... இலக்கில் இல்லை.... இலக்கிலிருக்கும் வீச்சு... தன்னம்பிக்கையில் இல்லை... தன்னம்பிக்கையிலிருக்கும் வீச்சு... பயிற்சியில் இல்லை... பயிற்சியிலிருக்கும் வீச்சு... முயற்சியில் இல்லை... முயற்சியிலிருக்கும் வீச்சு... செயலில் இல்லை... செயலில்லிருக்கும் வீச்சு... போதுமானதாய் இல்லை... கனவு... நினைவாக வேண்டும்... நினைவு... உணர்வாக வேண்டும்... உணர்வு... இலக்காக வேண்டும்... இலக்கு... தன்னம்பிக்கையாக வேண்டும்... தன்னம்பிக்கை... பயிற்சியாக வேண்டும்... பயிற்சி... முயற்சியாக வேண்டும்... முயற்சி.... செயலாக வேண்டும்... அந்தச் செயலே வெற்றியைக் கொடுக்கும்...   இருக்க வேண்டும்... கனவு உருமாற... செயல் மனதார... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஜூலை

Read More

ஜாதிகளால் ஜோதியானது… நம் காதலும்… -#கவிதை

நம் காதலுக்கு எமனாய் வந்தது ஜாதி... வெல்ல முடியவில்லை, நாம் அதனுடம் மோதி... ஜாதியை இங்கே ஆக்கிவிட்டார்கள், காதலுக்கான தகுதி... வென்று கரம்பிடிக்க எண்ணினேன் மதியால்... துவளாமல் போராடியும் துவண்டுக்கிடக்கிறேன் விதியால்... இருமனம் திருமணத்தில் சேர, எவனெவனோ தரவேண்டியிருக்கிறது அனுமதி... நம்மைப் பிரித்தால் ஏன் அவனுக்கு கிடைக்கிறது வெகுமதி... உலகிற்குச் சொல்கிறார்கள், நம் பிரிவை வைத்து, ஒரு சேதி... சமூகம் ஏனோ கடைப்பிடிக்கிறது, அநீதியைக்கண்டும், அமைதி... நம் காதலும் கரைந்துப்போனது... நம் மனமும் நிம்மதியிழந்துப்போனது... இந்த ஜாதிகளால்... ஜோதியானது... நம் காதலும்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… மே

Read More

இனி நான் என்ன செய்வேன்…? – #கவிதை

தவறேன தெரிந்தும்... தவறு செய்தேன்... இழிவென தெரிந்தும்... துணிந்து செய்தேன்... மடமையென தெரிந்தும்... முடிவு செய்தேன்... உண்மையென தெரிந்தும்... ஊழல் செய்தேன்... என்னையும் பாதிக்கும் எனத் தெரிந்தும்... பாவம் செய்தேன்... என்னை நீ நம்புவது தெரிந்தும்.. நான் உனக்கு மோசம் செய்தேன்... உன் நற்குணம் தெரிந்தும்... உனக்கு நான் தீமை செய்தேன்... என் மாண்பு தெரிந்தும்... மானங்கெட்ட அந்தச் செயலைச் செய்தேன்... எல்லாம் தெரிந்தும்... இழிவு செய்தேன்... நான் கற்ற கல்விக்கு, இனி என்ன பயன்...? நான் பெற்ற அறிவிற்கு, இனி என்ன பயன்...? என் கீழ்தனமான புத்திக்கு, இனி என்ன பயன்...? தவறே செய்யாத உன்னை தண்டித்த என்

Read More

என்ன பதில்…? என்ன பதில்…? – #கவிதை

உனக்கு நான் இழைத்த கொடுமைக்கு... என்ன பதில்...? என்னால் நீ விடும் கண்ணீருக்கு... என்ன பதில்...? இன்னும் உண்மையை நெஞ்சிக்குள்ளேயே வைத்திருக்கும், உன் நற்குணத்திற்கு... என்ன பதில்...? என்னை எப்போதும் காட்டிக்கொடுத்திடாத, உன் நல்லுள்ளத்திற்கு... என்ன பதில்...? தவறே செய்யாத, உன்னை தண்டித்தேனே... அதற்கு என்ன பதில்...? நீ படும் மன வேதனைக்கு என்ன பதில்...? உறக்கமில்லாமல் தவிக்கும் உனக்கு என்ன பதில்...? என்னால் நீ இழந்த சுதந்திரத்திற்கு என்ன பதில்...? என் மேல் நீ வைத்த அதீத நம்பிக்கைக்கு என்ன பதில்...? என் மேல் நீ கொண்டிருக்கும் கோபத்திற்கு

Read More