Monday, May 6, 2024
Home > கவிதை (Page 5)

மன்னித்துவிடு… இல்லையேல் தண்டித்துவிடு… – #கவிதை

ஒரு ஆண் செய்யும் பெரும்பாவம், ஒரு பெண்ணின் கண்களில் கண்ணீர் சிந்த வைப்பது... அந்தப் படுபாவத்தை நான் செய்துவிட்டேன்... என் மனசாட்சி என்னை மன்னிக்கவில்லை... அவள்... எந்தத் தவறும் செய்யவில்லை... என் மீது குற்றமிருந்தும், எந்தக் குற்றமும் சுமத்தவில்லை... நான் செய்த தவறைப் பற்றி, அவள் யாரிடமும் மூச்சே விடவில்லை... அதற்காகவே தான் நான் அவளை தண்டித்தேனா? என் வார்த்தைகள், அவள் நெஞ்சை எவ்வளவுக் காயப்படுத்தியிருக்கும்... என் கோபம், அவளை எவ்வளவு வாட்டியிருக்கும்... எனது அவசர முடிவு, அவளை எவ்வளவு வருத்தியிருக்கும்... தவறேதும் செய்திராத ஒரு பெண்ணை

Read More

தியாகத்திற்கு… துரோகம் செய்தேன்… – #கவிதை

நல்ல உள்ளம் கொண்டவள் அவள்... எனக்காக எதையும் செய்யத் துணிந்தவள் அவள்... நான் வியக்கும் திறமைசாலி அவள்... நான் இரசித்த அழகியும் அவள்... அவளுக்கு நான் செய்துவிட்டேன்... ஒர் அநீதி... அவள் தவறேதும் செய்திராமல்... என் மேல், அவள் கொண்ட நம்பிக்கையினால் மட்டுமே... கண்கலங்கியிருக்கிறாள்... தலைக்குனிந்து நிற்கிறாள்... தண்டனை ஏந்தியிருக்கிறாள்... என்னைக் காத்துக்கொள்ள, அவளை பலி கொடுத்துவிட்டேனே... அதனால்... அவள் மனம் என்ன வேதனைப் பட்டிருக்கும்... என்னைக் காட்டிக்கொடுக்காமல்... யாரிடமும் எதையும் சொல்லாமல்... உண்மையெல்லாம் அவள் மனதிலேயே புதைத்து... என்னை நல்லவனாக்கி... அவள் கெட்டவளாகி... நெஞ்சி ஏந்தி நிற்கிறாளே என் தண்டனையை... நான் செய்தது துரோகம்... அவள் செய்தது தியாகம்... என்ன

Read More

உனக்காகக் காத்திருப்பேன்… – #கவிதை

இவ்வளவு நாள் ஏன் என் கனவில் வரவில்லை என... உன்னை கோபித்துக்கொள்வதா...? இல்லை... இப்போது ஏன் மீண்டும் என் கனவில் வந்தாய் என... உன்னை கோபித்துக்கொள்வதா...? வேண்டாம் என்று சொல்லிவிட்டாய் நீ... என்னை... தொந்தரவே செய்யவில்லை அதன் பின்னே நான்... உன்னை... ஏதோவொரு சக்தி சேர்த்துவைக்க நினைக்கிறதா...? நம்மை... என் எனக்கு இப்படியொரு... நிலைமை... உன்னை நினைத்தாலே என் மனம் ஏனோ... வலிக்கிறதே... உன்னை மீண்டும் மீண்டும் நினைக்க என் மனம் ஏனோ... துடிக்கிறதே... ஒதுங்கித்தானே இருந்தேன் இவ்வளவு நாள் உன்னைவிட்டு... ஏன் பேசினாயோ என்னிடம் உன் மெளனத்தை கலைத்திவிட்டு... இப்போது... மீண்டும் மெளனமாகிவிட்டாயே என்னை புலம்ப விட்டுவிட்டு... என்ன

Read More

மீளாத் துயிலில் நீங்கள்… மீளாத் துயரில் நாங்கள்…

என் அறையிலிருந்து எட்டிப் பார்த்தேன்... நீங்கள்... எங்கள் கல்லூரி விடுதி மேலாளரிடம் பேசிக்கொண்டிருந்தீர்... நான் உங்களை அன்று தான் முதன் முதலில் பார்த்தேன்... நான் உங்களைப் பார்த்ததை நீங்கள் பார்த்தீர்... என்னை அழைத்தீர்... தாயில்லா என் மகனை இந்த விடுதியில் விட்டுச் செல்கிறேன்... என்றீர்... அவனையும் கொஞ்சம் அரவனைத்துக்கொள்ளப்பா என்றீர்... அவனுடன் நட்பு பாரட்டப்பா என்று கேட்டுக்கொண்டீர்... என்னை மன்னியும் அப்பா... தங்கள் மகனிடம் நட்பு பாரட்டியதை விட... வாக்கு வாதம் செய்ததே அதிகம்.... ஆனாலும்... அவன் விடுதியில் இருந்த வரை... நான் அவனைப் பார்த்துப் பேசாத நாளில்லை... எவ்வளவு சண்டையிட்டாலும் நாங்கள்

Read More

பெண்கள் தினமாம்… – #கவிதை

பெண்கள் தினமாம்... பெண்கள் தினமாம்... ஆண்டுதோறும் கேலிக்கூத்தான வியாபாரமாக மாறிவிட்ட பெண்கள் தினமாம்... பெண்ணிற்கு அந்த ஒரு நாள் மட்டும் தான் கொண்டாட்டமா? மற்ற எல்லா நாட்களிலும் பெண்ணிற்கு என்ன திண்டாட்டமா? பெண்ணிற்கு தனியாக தினம் வைத்துக் கொண்டாடும் சமூகமே... பெண்ணிற்கு என்று... எப்போது தரப்போகிறாய்... பாதுக்காப்பை...? எப்போது தரப்போகிறாய்... உடல் சுதந்திரத்தை...? எப்போது தரப்போகிறாய்... பெண்ணுரிமை...? எப்போது தரப்போகிறாய்... உண்மையான சொத்துரிமை...? எப்போது தரப்போகிறாய்... வாழ்க்கைத்துணைத் தேர்வுரிமை...? எப்போது தரப்போகிறாய்... அரசியலுரிமை...? எப்போது தரப்போகிறாய்... முழு சுதந்திரம்...? அதுவரை... வேண்டாமே ஆண்டிற்கொரு முறை பெண்கள் தினம்... எப்போதும் வேண்டாமே... ஆணிற்கென்று தனியொரு தினம்... ஆண் பெண்ணாக முடியாது... பெண் ஆணாகவும் முடியாது... ஆனாலும்

Read More