Friday, April 26, 2024
Home > கவிதை > எனக்கு தண்டனைக்கொடு பெண்ணே… – #கவிதை

எனக்கு தண்டனைக்கொடு பெண்ணே… – #கவிதை

அவளுக்கு…

நான் செய்தது மடத்தனத்தின் உச்சம்…

அவளுக்கு…

இதற்கு மேல் அநீதியிழைக்க என்ன இருக்கிறது மிச்சம்…

எனக்கு அவள் உண்மையாய் இருந்ததற்கு பரிசாய் அவளுக்கு அளித்தேன்…

அவள் வாழ்வின் மீதான அச்சம்….

தவறிற்கு மேல் தவறு செய்துக்கொண்டிருக்கிறேன் எக்கச்சக்கம்….

சக மனுசியை அவமதித்த எனக்கு,

இனி மனிதனாய் வாழத்தகுதியேயில்லை…

ஆண் என சொல்லிக்கொள்வதில்,

இனி எனக்கு பெருமையில்லை…

தவறிழைக்காத பெண்ணின் கண்ணீரின் முன்னால்,

இனி நான் உயிர் வாழத்தகுதியேயில்லை…

அந்தப் பெண்ணிற்கு நான் இழைத்த அநீதியால்,

அவளிடம் மன்னிப்புக் கேட்பதற்கே எனக்கு உரிமையில்லை…

அவள் என்னைத் தூற்றினாலும் தவறில்லை…

அவள் என்னைக் கூண்டில் ஏற்றினாலும் தவறில்லை…

அவள் என்னைக் கொன்றால் கூடத் தவறேயில்லை…

அவளுக்கு அநீதியிழைக்க ஆணாய் பிறந்தது, நான் பெற்ற சாபம்…

என்னால், அநீதியிழைக்கப்பட்ட அவள், உண்மையில் பாவம்…

மாபெரும் தவறிழைத்த நான்,

அவளின் தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்…

செய்த தவறை உணர்ந்த குற்றவாளியாய்… காத்திருக்கிறேன்…

உன் தண்டனைக்காக….

தண்டனைக்கொடு பெண்ணே…

தைரியமாய்…

நீ எனக்கு தண்டனைக்கொடு பெண்ணே…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

மார்ச் 21, 2020

மதியம் 03:04 மணி…