Friday, May 17, 2024
Home > #காதல் (Page 11)

புன்னகையே உனதழகு… – #கவிதை

இதுவரை நான் உன்னை இவ்வளவு அமைதியாய் பார்த்ததில்லை... அது நன்றாகவுமில்லை... நீ இப்படி இருப்பது எனக்கு பிடிக்கவுமில்லை... ஏன் எதையோ பறிகொடுத்ததைப் போலவே இருக்கிறாய்... ஏன் எதையோ தொலைத்ததைப் போலவே நடந்துக்கொள்கிறாய்... உன் மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கையில்... தவறாய்... மாபெரும் தவறாய்... சொல்லித் தொலைத்துவிட்டேன... என் காதலை... உன்னிடம்... அதனால் வந்த கோபம் உன் முகத்திற்கு அழகுதான்... ஆனால்... உன் புன்னகையே உன் உள்ளத்திற்கு அழகு... சில நாட்களாய்... தீவிரமாய் தேடிக்கொண்டிருக்கிறேன்... உன்னையே உன்னிடம்... உன் முகத்தில் கவலை ரேகையே எனக்குத் தெரிகிறது...   என்னை நீ வேண்டாம் என்று சொல்லிவிட்டாயே... ஆனால்... நீயோ காதலில் தோற்றவள்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 13

பன்னிரெண்டாவது பகுதியின் லிங்க்... எனது அப்பாவும் அம்மாவும் இப்போது சில நேரங்களில் ஒரு விசயத்திற்காக ஒன்று கூடுகிறார்கள். ஆனால் அது அவர்களது அன்பு மகளுக்காக அல்ல. அவர்கள் ஒன்று கூடுவது எதற்காக என்றால் அது ஒரு சொத்திற்காக. அந்த சொத்து டி.என்.நகர் என்று அழைக்கப்படும் தாதாபாய் நோவ்ரோஜி நகரில் இருக்கிறது. அக்காலத்தில் தாத்தா பெயரில் வாங்கியது. தாத்தாவின் அப்பா ஊரிலிருந்த மிச்ச சொச்ச சொத்தை விற்றுக் கொஞ்சம் பணம் கொண்டு வந்திருந்தார். தாத்தாவிற்கும்

Read More

அடியே நான் என்ன செய்ய – #குட்டிகவிதை

நீ என்னை மறுக்க மறுக்க... எனக்கு இன்னும் இன்னும் உன்னைப் பிடிக்கிறதே... என்ன செய்ய... அடியே நான் என்ன செய்ய... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… பிப்ரவரி 25, 2020 மாலை 07.30 மணி…

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 12

பதினொறாவது பகுதியின் லிங்க்... என் கதை என்னவொன்று பார்க்கும் முன் என் குடும்பப் பின்னனியைப் பற்றி நீங்கள் கொஞ்சம் தெரிந்துக்கொள்ள வேண்டும். என் அப்பாவும் அம்மாவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்கள். இருவரும் ஒரே அரசு வங்கி அலுவலகத்தில் கிளார்க்காக வேலைப் பார்த்தனர். அப்பாவின் பெயர் எழில். பெயருக்கு ஏற்றார் போல் அழகாக இருப்பார். என் தாத்தா ராமசாமியைப் போன்றே நல்ல வெள்ளை நிறம். அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். அம்மாவின் பெயர்

Read More

ஒண்ணுமில்ல – முதல் அத்தியாயம்…

“நான் எங்கயாவது போறான். என்ன கொஞ்ச தனியா விடுங்கமா” என்று அம்மாவிடம் கத்திவிட்டு எனது சிவப்பு யமஹா ஆர்.எக்ஸ் 135ஐ எடுத்துக்கொண்டு ரெட்டப்பாலத்திற்கு செல்ல நினைத்தேன். அதற்குள், “ராஜேஸ். உன் தம்பி எங்கேயே வண்டி எடுத்துட்டுப்போறான் பாருடா” என்று அம்மா அண்ணனை அழைத்தாள். அதற்குள் நான் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியிருந்தேன். நேற்றும், இன்றும் என் வீட்டில் நடந்த களபேரங்களால் நான் கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். என் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது இந்த இரண்டு நாட்கள்.

Read More