Sunday, April 28, 2024
Home > கவிதை (Page 11)

நினைவெல்லாம் அவள் தான்…

அவளை மறக்க போராடுகிறேன் இப்போதும்... அவளின் நினைவுகளால் தவிக்கிறேன் எப்போதும்... என் கனவெல்லாம் அவள் தான்... என் நினைவெல்லாம் அவள் தான்... என் சுகமும் அவள் தான்... என் துக்கமும் அவள் தான்... அவளின் சிரிப்புச்சத்தம்  கேட்டுக்கொண்டே இருக்கிறது... என் காதுகளில்... அவளின் கடைசி அழுகை வலித்துக்கொண்டே இருக்கிறது... என் மனதில்... அவள் என்னைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டாள்... என்னை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டாள்... ஆனால்... எப்போதும் அவள் என் உயிரிலே கலந்திருக்கிறாள்... அணு அணுவாய்... - உ.கா. மே 30, 2019 காலை 8.25 மணி

Read More

காதலைத்தவிர வேறொன்றுமில்லை…

நான் அவளைத் தேடிச்செல்ல எனக்கு தகுதியுமில்லை... என்னை அவள் மன்னிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்புமில்லை... அவள் என்மேல் கொண்டுள்ள கோபத்திலும்  தவறுமில்லை... அவளை மறக்க எவ்வளவு முயன்றாலும், அதில் எனக்கு  வெற்றியுமில்லை... என் கனவுகளிலும், என் நினைவுகளிலும் அவள் இல்லாமல் இருந்ததுமில்லை.. எங்கள் காதலின் ஆழத்தை நான் உணர்ந்ததுமில்லை... என் தவறுகளை நினைத்து, பொறுப்பேற்று நான் வருந்தாத நாளுமில்லை... என் தவறுகளுக்காக என்னை மன்னிக்க நான் தயாராகவுமில்லை... என் தவறுகளுக்காக என்னை நான் தண்டித்துக்கொள்ளாத நொடியுமில்லை... அவள் போய்விட்டாள், என்னைத் தாண்டி நெடுந்தூரம், இனி அவள் திரும்ப பாதையுமில்லை... அவள் திரும்பிவந்தாளும், இச்சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ள போவதுமில்லை... வலியால் துடிப்பதைத் தவிர எனக்கு

Read More