Friday, April 26, 2024
Home > #கவிதை (Page 6)

அடியே நான் என்ன செய்ய – #குட்டிகவிதை

நீ என்னை மறுக்க மறுக்க... எனக்கு இன்னும் இன்னும் உன்னைப் பிடிக்கிறதே... என்ன செய்ய... அடியே நான் என்ன செய்ய... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… பிப்ரவரி 25, 2020 மாலை 07.30 மணி…

Read More

ஏன் பிடிக்கிறது உன்னை… -#கவிதை

ஏன் உன்னைப் பிடித்திருக்கிறது எனக் கேட்கிறாய்? எனக்கே இந்தக் கேள்விக்கு பதில் தெரியாதபொழுது... நான் எப்படியடி சொல்வேன் உனக்கு பதிலை... உனக்காக முயற்சி செய்கிறேன்... கேட்டுக்கொள்ளடி என் கண்ணே...   உன் கண்கள் எனக்குப் பிடிக்கும்... சிரிக்காமல் சிரிக்கும் உன் உதடுகள் எனக்குப் பிடிக்கும்... உனது புருவத்தின் அழகு பிடிக்கும்... ஏதேனும் கேள்வி கேட்கையில் உயரும் அந்தப் புருவம் இன்னும் பிடிக்கும்... உன் மேலே நீ வரைந்துக் கொள்ளும் கோளங்கள் பிடிக்கும்... உன் பெயரை உன் கையில் எழுதி வைத்திருப்பது பிடிக்கும்... நான் கண்டுவிட்டால், அதனை நீ

Read More

காதல், நம் மனதிலாவது வாழட்டும்… – #கவிதை

பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளையை பிடிக்கவேயில்லை என்று என்னிடம் சொல்கிறாய்... உன் குடும்பத்திற்காக அவனை மணமுடிக்க சம்மதித்துவிட்டாய்... என்னை மட்டும் ஏனோ அடிக்கடி நினைக்கிறாய்... என்னைப் பிடித்திருந்தும் பிடிக்கவில்லை என்கிறாய்... ஏனோ, என் மேல் கொள்ளைக் கோபத்தில் இருக்கிறாய்... தாமதமாக என் காதலை உன்னிடம் சொன்னேன் என்ற கோபமா? இல்லை... ஏன் காதலை உன்னிடம் சொன்னேன் என்ற கோபமா? காதல்... இப்போது காலம் கடந்துவிட்டது... வாய்ப்புகளின் நேரம் முடிந்துவிட்டது... நான் ஆகியிருக்க வேண்டும் உந்தன் கணவனாய்... நீ ஆகியிருக்க வேண்டும் எந்தன் மனைவியாய்... நாம் என்றும் சேர்ந்திருந்திருக்க வேண்டும் நல்லதொரு குடும்பமாய்... வாழ்க்கையையே கொண்டாடியிருப்போம் நாம்

Read More

என்ன தெரியும் எனக்கு… – #கவிதை

உன்னைப் பற்றி என்னத் தெரியும் எனக்கு... என்று நீ கேட்கிறாய்... உன் கேள்வியில் உண்மை உள்ளதடி என் கண்ணே... உன் பெயரைத் தவிர என்னத் தெரியும் எனக்கு? உன் பிறந்த நாளும் தெரியாது... நீ பிறந்த ஊரும் தெரியாது... உன் பெற்றவர் பெயரும் தெரியாது... உன்னுடம் பிறந்தவன் பெயரும் தெரியாது... உன் முகவரியும் எனக்குத் தெரியாது... நீ என்ன சாதி என்றும் தெரியாது... உன் வீடு சொந்த வீடா என்பதும் தெரியாது... உன் சொத்துபத்தும் எனக்குத் தெரியாது... உன் தாய்மொழி என்னவென்றும் தெரியாது... உன் குடும்பம் எப்படிப்பட்டது என்பதும்

Read More

ஏன் உன் மேல் இந்தக் காதல்… – #கவிதை

அன்று தான் முதன் முதலில் அந்த எண்ணம் தோன்றியது என் உள்ளத்தில் மின்னலைப் போல... என் மனமும் அந்த எண்ணத்தை சரியெனச் சொன்னது... அடுத்த சில தினங்களில் வந்தது... காதலர் தினம்... அன்றே சொல்லிவிட்டே உன்னிடம்... என் காதலை... உன் முடிவையும் சொல்லிவிட்டாய்... உன் மறுப்பையும் பதிவுசெய்துவிட்டாய்... என்னிடம்...   மூன்று வருடம் பழக்கம் நமக்கு... நான் தேடிச்சென்றவளும் என்னைக் கைவிட்டாள்... என்னை நாடி வந்தவளும் என்னை உதறிவிட்டாள்... இவை எல்லாம் தெரியும் தானே உனக்கு... அப்போதும் கூட நான் உன்னிடம் அறுதல் தேடவில்லையே... என் கண்ணே... உன்னுடன் எனக்குத் தனிமையில் கிடைக்காத நாட்களா? அதில்

Read More