Friday, April 26, 2024
Home > கவிதை (Page 4)

ஜாதிகளால் ஜோதியானது… நம் காதலும்… -#கவிதை

நம் காதலுக்கு எமனாய் வந்தது ஜாதி... வெல்ல முடியவில்லை, நாம் அதனுடம் மோதி... ஜாதியை இங்கே ஆக்கிவிட்டார்கள், காதலுக்கான தகுதி... வென்று கரம்பிடிக்க எண்ணினேன் மதியால்... துவளாமல் போராடியும் துவண்டுக்கிடக்கிறேன் விதியால்... இருமனம் திருமணத்தில் சேர, எவனெவனோ தரவேண்டியிருக்கிறது அனுமதி... நம்மைப் பிரித்தால் ஏன் அவனுக்கு கிடைக்கிறது வெகுமதி... உலகிற்குச் சொல்கிறார்கள், நம் பிரிவை வைத்து, ஒரு சேதி... சமூகம் ஏனோ கடைப்பிடிக்கிறது, அநீதியைக்கண்டும், அமைதி... நம் காதலும் கரைந்துப்போனது... நம் மனமும் நிம்மதியிழந்துப்போனது... இந்த ஜாதிகளால்... ஜோதியானது... நம் காதலும்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… மே

Read More

நீக்க மற நிறைந்திருக்கிறாய்… – #கவிதை

நீ இல்லாத நாட்களை, நான் கடக்கப்போகும் வழி தெரியவில்லை... நீ தந்துவிட்டுச் சென்ற வலி, என் உயிருள்ள வரை மறையப்போவதுமில்லை... நீ எனக்குமில்லை... நான் உனக்குமில்லை... இனி நமக்கு எதிர்காலமேயில்லை... உன் நினைவுகளை என்னுள் சுமக்கிறேன் கருவாக... அது வளர்ந்து என் இதயத்தின்னுள்ளே இருக்கட்டும் வடுவாக... உலகமே ஊரடங்கால் நின்றிருக்க... என் மனமோ உன் நினைவுகளிலேயே, சுற்றிச் சுற்றி வந்திருக்க... யாருக்கும் அடங்காமல்... எதனையும் ஏற்க மனமில்லாமல்... பிரிவு கொடுத்த வலியை தாங்க முடியாமல்... கலங்கிப்போய் நிற்கிறேன்... மீளாத்துயரில் தவிக்கிறேன்... எல்லோரையும் தவிர்க்கிறேன்... மாற்றங்களைத் தேடித் தேடி அலைகிறேன்... வெறுமையாய்... வெற்றியில்லாமல்.... ஆனால்... நீ மட்டும் இன்னும்... நீக்க மற நிறைந்திருக்கிறாய்... என் மனதிலே... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என்

Read More

இனி நான் என்ன செய்வேன்…? – #கவிதை

தவறேன தெரிந்தும்... தவறு செய்தேன்... இழிவென தெரிந்தும்... துணிந்து செய்தேன்... மடமையென தெரிந்தும்... முடிவு செய்தேன்... உண்மையென தெரிந்தும்... ஊழல் செய்தேன்... என்னையும் பாதிக்கும் எனத் தெரிந்தும்... பாவம் செய்தேன்... என்னை நீ நம்புவது தெரிந்தும்.. நான் உனக்கு மோசம் செய்தேன்... உன் நற்குணம் தெரிந்தும்... உனக்கு நான் தீமை செய்தேன்... என் மாண்பு தெரிந்தும்... மானங்கெட்ட அந்தச் செயலைச் செய்தேன்... எல்லாம் தெரிந்தும்... இழிவு செய்தேன்... நான் கற்ற கல்விக்கு, இனி என்ன பயன்...? நான் பெற்ற அறிவிற்கு, இனி என்ன பயன்...? என் கீழ்தனமான புத்திக்கு, இனி என்ன பயன்...? தவறே செய்யாத உன்னை தண்டித்த என்

Read More

என்ன பதில்…? என்ன பதில்…? – #கவிதை

உனக்கு நான் இழைத்த கொடுமைக்கு... என்ன பதில்...? என்னால் நீ விடும் கண்ணீருக்கு... என்ன பதில்...? இன்னும் உண்மையை நெஞ்சிக்குள்ளேயே வைத்திருக்கும், உன் நற்குணத்திற்கு... என்ன பதில்...? என்னை எப்போதும் காட்டிக்கொடுத்திடாத, உன் நல்லுள்ளத்திற்கு... என்ன பதில்...? தவறே செய்யாத, உன்னை தண்டித்தேனே... அதற்கு என்ன பதில்...? நீ படும் மன வேதனைக்கு என்ன பதில்...? உறக்கமில்லாமல் தவிக்கும் உனக்கு என்ன பதில்...? என்னால் நீ இழந்த சுதந்திரத்திற்கு என்ன பதில்...? என் மேல் நீ வைத்த அதீத நம்பிக்கைக்கு என்ன பதில்...? என் மேல் நீ கொண்டிருக்கும் கோபத்திற்கு

Read More

எனக்கு தண்டனைக்கொடு பெண்ணே… – #கவிதை

அவளுக்கு... நான் செய்தது மடத்தனத்தின் உச்சம்... அவளுக்கு... இதற்கு மேல் அநீதியிழைக்க என்ன இருக்கிறது மிச்சம்... எனக்கு அவள் உண்மையாய் இருந்ததற்கு பரிசாய் அவளுக்கு அளித்தேன்... அவள் வாழ்வின் மீதான அச்சம்.... தவறிற்கு மேல் தவறு செய்துக்கொண்டிருக்கிறேன் எக்கச்சக்கம்.... சக மனுசியை அவமதித்த எனக்கு, இனி மனிதனாய் வாழத்தகுதியேயில்லை... ஆண் என சொல்லிக்கொள்வதில், இனி எனக்கு பெருமையில்லை... தவறிழைக்காத பெண்ணின் கண்ணீரின் முன்னால், இனி நான் உயிர் வாழத்தகுதியேயில்லை... அந்தப் பெண்ணிற்கு நான் இழைத்த அநீதியால், அவளிடம் மன்னிப்புக் கேட்பதற்கே எனக்கு உரிமையில்லை... அவள் என்னைத் தூற்றினாலும் தவறில்லை... அவள் என்னைக் கூண்டில்

Read More