Friday, April 26, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 36

ஒண்ணுமில்ல… பகுதி 36

முப்பத்தி ஐந்தாவது பகுதியின் லிங்க…

நான் கோபமாக பேசிக்கொண்டிருந்தப் பொழுதே இன்ஸ்பெக்டர் கோபமாக அவர் சீட்டிலிருந்து எழுந்தார்.

“என்னாமா விட்டா பேசிக்கிட்டே போகற”

“நீ எந்த ஸ்டேசனுல யார மயக்கி புகார் கொடுத்திருக்கையோ அவங்க அந்த புகார விசாரிப்பாங்க. என் ஸ்டேசன் லிமிட்ல இருக்கிற உன் கம்பெனி எச்.ஆர் உன் மேல புகார் கொடுத்திருக்கார். அத நான் விசாரிப்பேன். இல்ல மேல நடவடிக்கை எடுப்பேன். உன்னைய ரிமேண்டு கூட பண்ணுவேன்” என்றார்.

“என்ன சார். நீங்க சொல்றது சரிங்கிற மாதிரி தான் தெரியுது. என்ன பண்ணலாம். பேசாம சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்-னு அக்‌ஷன் எடுத்திடலாமா” என்று எச்.ஆரைப் பார்த்து அந்த இன்ஸ்பெக்டர் கேட்டார்.

“சார் ஒரு காம்பிரமைஸ் ஐடியா இருக்கு” என்றான் அந்த எச்.ஆர்.

“அப்படியா? சொல்லுங்க சார்” என்று ஒன்றும் தெரியாததைப் போல நடித்தான் அந்த இன்ஸ்பெக்டர். எல்லாம் டிராமா, பேசி வைத்து நடிக்கிறார்கள் என்று எனக்கு அப்போதே தெரிந்தது.

“அந்தப் பொண்ணு என் மேல கொடுத்திருக்கிற புகார வாபஸ் வாங்க சொல்லுங்க. நானும் என் புகார வாபஸ் வாங்குறேன்.”

நான் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன். என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. கொஞ்சம் பணமும், அதிகார பலமும் இருந்துவிட்டால், என்ன வேண்டுமானாலும் இங்கே சிலரால் செய்துவிட முடிகிறது. நீதி இங்கேயே புதைக்கப் படுகிறது. நீதியை நிலைநாட்ட வேண்டிய காவலர்களே நீதியை மிதிக்கிறார்கள் என்பதே இங்கே உண்மை. இது வேலியே பயிர மேயிற கத மாதிரி இருக்கே என்று சலித்துக்கொண்டேன். வெறுப்பான இருந்தது. என்ன சொல்வது என்று தெரியவில்லை. என் பிரச்சனைக்கு தாத்தாவை வேறு போலிஸ் ஸ்டேசனுக்கு வர வேண்டியதா போயிடுச்சே என்று எனக்கு அசிங்கமாக இருந்தது. பேசாமல் புகாரை வாபஸ் வாங்கிவிடலாம் என்று எனக்குத் தோன்றியது. வெறுமையின் உச்சத்திலிருந்தேன். சோபனாவைப் பார்த்தேன். அவள் அதிர்ச்சியில் உரைந்திருந்தாள். தாத்தாவின் கையை இறுக்கப் பற்றிக்கொண்டிருந்தாள்.

அப்போது தாத்தா, “என் பேத்தி அவ புகார வாபஸ் வாங்க மாட்டா” என்று கனீரென்று சொன்னார்.

கோபத்தின் உச்சிக்குச் சென்ற இன்ஸ்பெக்டர் வேகமாகச் சென்று தாத்தாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

நானும் சோபனாவும் அதிர்ந்துப் போய்விட்டோம். எனக்கு அழுமையே வந்துவிட்டது.

“சார். அவர எதுக்கு அடிக்கிறீங்க” கத்தினேன்.

அப்போது அந்த எச்.ஆர் எழுந்து, நீ உன் புகார வாபஸ் வாங்க முடியாதுனு சொன்னா, உன்னையும், உன் தாத்தாவையும் சும்மா விட மாட்டேன்” என்று என்னை மிரட்டினான்.

“ஒழுங்கா உன் பேத்தியை அந்தப் புகார வாபஸ் வாங்கச் சொல்லு” என்றான் தாத்தாவைப் பார்த்து.

தாத்தா பதிலேதும் பேசாமல் அந்த எச்.ஆரை முறைத்தார்.

“இது சரிப்பட்டு வர்ற மாதிரி தெரியல.”

என் அருகில் இருந்த பெண் எஸ்.ஐயை அழைத்து, “நீங்க ரீமெண்டு பேப்பர்ஸ் ரெடி பண்ணுங்க. அப்படியே பிரஸ்ஸுக்கும் சொல்லிடுங்க. அப்பதான் இதுகளுக்கு புத்தி வரும்” என்றார் அந்த இன்ஸ்பெக்டர்.

எனக்கு என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. எப்படி ரியாக்ட் செய்வதென்றும் தெரியவில்லை.

“முடிஞ்சா. ரீமெண்டு பண்ணிப்பார் டா” என்று இன்ஸ்பெக்டரைப் பார்த்து என் தாத்தா சொன்னார்.

மீண்டும் தாத்தாவை அறைய கை ஓங்கினான் அந்த இன்ஸ்பெக்டர்.

அப்போது.

முப்பத்தி எழாவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு