Friday, March 29, 2024
Home > #பெண்

கேட்கிறேன் பாவமன்னிப்பு… மணிப்பூருக்காக – #கவிதை

ஆடையில்லாமல் ஓடவிட்டார்கள்... ஜாதியின் பெயராலும், இறைவனின் பெயராலும்... தடுக்க வரவில்லை... இராமனும்... அல்லாவும்... ஏசுவும்... ஆயிரம் ஆயிரம் வக்கிரம் கொண்ட கண்கள் ரசித்திருக்கும்... அந்த பெண்களின் அந்தரங்கங்களை... ஆனாலும் கோடிக்கணக்கான மனங்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் உலகெங்கும்... நடந்ததை நினைத்து நினைத்து வருந்தியிருக்கும்... கண்ணில்லாமல் போனது அரசுக்கு... கலவரம் தேவையாய் இருந்தது ஆட்சிக்கு... இது தவறென்றே தெரியாமல் போனது மனித அறிவிற்கு... போகிறதே மனிதகுலம் அழிவிற்கு.. யாரெல்லாம் பொறுப்பு கலவரமான செயலுக்கு... களங்கமே ஏற்ப்பட்டதே இந்திய நாட்டின் புகழுக்கு... இனி கிடைக்குமா மரியாதை இந்தியர் என்னும் பெயருக்கு... ஏன் என்ற கேள்விக்கு? இராமனுக்கு... அல்லாவிற்கு... ஏசுவிற்கு... ஜாதிக்கு... என்கிறார்கள் மனசாட்சியேயில்லாமல் இன்றைக்கு... மனித செயலுக்கு இறை

Read More

தீராக் காதல் – #கவிதை

ஏழு வருட காதலையும் துச்சமென தூக்கி எறிந்தாள் அவள் தம் பெற்றோர் சம்மதம் பெறமுடியாமல்... அகமகிழ்ந்த காதலையும் வேண்டவே வேண்டாம் என்றாள் அவள் தன் மனதை கல்லாக்கி... அவள் முடிவு இதுதான் எனில் எழுவருடமாய் அவள் தன் காதலை அள்ளித்தந்தது ஏனோ...? என்னுடன் சேர வழியேயில்லாமல் என்னை காதலித்து என்னுடன் சேர அவள் நினைத்தது என் தவறா...? என் இன்பத்திலும் துன்பத்திலும் அவள் பங்கெடுத்தது என்னை அவள் மீளத்துயரில் தவிக்கவிடத்தானோ...? துன்பமென்னும் தெரிந்தும் அவள் என்னைப் பிரிந்தாள் அது ஏனோ...? அவளை மறக்க நினைக்காத நாளில்லை... முயன்று... முயன்று... முடியாமல்... அவளை

Read More

நான் கேட்ட சத்தம் – #சிறுகதை

“அபி... அபி...” யாரோ என்னை அழைக்கும் குரல் கேட்டது. சட்டென்று திரும்பிப் பார்த்தேன். “இங்க வாம்மா” என்று நான் வந்திருந்த சூர்யா மருத்துவமனை செவிலியர் என்னை அழைத்தார். “எவ்வளவு நாள் டேட் தள்ளி போயிருக்கு” “15 நாள்” “டெஸ்ட் எடுத்துப் பாத்தீங்களா” “ஆமா சிஸ்டர்” “எதுக்கும் இங்க வந்து பிளட் டெஸ்ட் எடுத்துப்பாக்கலாம்-னு வந்தேன் சிஸ்டர்” “அது மேடம் சொல்லுவாங்க” “சரிங்க சிஸ்டர்” “இந்தாங்க. போயி டெஸ்ட் எடுத்துட்டுவாங்க” என்று சிஸ்டர் ஒரு சீட்டை கொடுத்தார். அதில் சிறுநீர் கார்ப்ப பரிசோதனை செய்து, முடிவுகளை கொண்டு

Read More

எனக்காக திறந்த கதவுகள்… – #சிறுகதை

இரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தது... நான் இன்னும் 40 படிக்கட்டுகள் இறங்க வேண்டியிருந்தது... விமானத்திற்கு இன்னும் ஒன்றே முக்கால் மணி நேரமே இருந்தது... இந்த இரயிலை விட்டால் அடுத்த இரயிலுக்கு இன்னும் 14 நிமிடம் காத்திருக்க வேண்டியிருந்தது... மூச்சறக்க ஓடோடி வந்தேன். கதை நடந்த இடம் : சென்னை மெட்ரோ இரயில் நிலையம். நேரம் : ஒர் ஞாயிறு காலை 07:45 மணி விமான நேரம் : காலை 9:30 சென்னை - மும்பை இண்டிகோ விமானம் இனி நடந்தது... மும்பை செல்லும்

Read More

பிரா-பளம் (Bra-blom) – #சிறுகதை

இன்று(01-08-21) ஞாயிற்றுகிழமை காலை 10.04 மணி. வழக்கம்போல கறி எடுத்துவிட்டு வந்து அமர்ந்திருந்தேன். என் மொபைலில் ஒரு அறிவிப்பு காட்டியது. (அட தங்கீலிஷ் மக்கா அது Mobile Notification தான்) என்னவாக இருக்கும் என்று பார்த்தேன். ஏதோ இன்று நண்பர்கள் தினமாம். அதற்காக எல்லோரும் வாழ்த்துச்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அப்படி வாட்ஸ்ஆப்பில் வந்த ஒரு செய்திக்கான அறிவிப்பை தான் நான் பார்த்தேன். வீட்டில் அம்மா சமையல் செய்து முடிக்க இன்னும் நேரமாகும்

Read More