Friday, April 19, 2024
Home > #காதல்

மின்னலே அடித்தது என்மேலே – #கவிதை

பலமுறை அவளை பார்த்திருக்கிறேன்.... சிலமுறை அவளிடம் பேச முயன்றிருக்கிறேன்... அவளை நான் பார்க்காத நாளில்லை.... அவளை பார்ப்பதில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை... அவளருகில் செல்ல மனத்தில் வீரமில்லை... அவள் என்னருகில் வரும் வேளையில், என் இதய துடிப்பிற்கு அளவேயில்லை... ஏனோ... சில நாட்களாக அவள் வரவில்லை... எங்கு தேடியும் என் கண்களில் அவள் படவில்லை... அவளை காணாத துயரிலிருந்து நாள் மீளவில்லை... நானாக சிரித்தேன், ஏன்னென்று தெரியவில்லை... துன்புற்றேன், எதற்கென்று புரியவில்லை... ஆனால்... அவள் பேரும் தெரியாது... அவள் ஊரும் தெரியாது... இருந்தும்... அவளை காணும் போது ஏதும் தோன்றியதில்லை... அவளை காணாததில், அவளை

Read More

நான் கேட்ட சத்தம் – #சிறுகதை

“அபி... அபி...” யாரோ என்னை அழைக்கும் குரல் கேட்டது. சட்டென்று திரும்பிப் பார்த்தேன். “இங்க வாம்மா” என்று நான் வந்திருந்த சூர்யா மருத்துவமனை செவிலியர் என்னை அழைத்தார். “எவ்வளவு நாள் டேட் தள்ளி போயிருக்கு” “15 நாள்” “டெஸ்ட் எடுத்துப் பாத்தீங்களா” “ஆமா சிஸ்டர்” “எதுக்கும் இங்க வந்து பிளட் டெஸ்ட் எடுத்துப்பாக்கலாம்-னு வந்தேன் சிஸ்டர்” “அது மேடம் சொல்லுவாங்க” “சரிங்க சிஸ்டர்” “இந்தாங்க. போயி டெஸ்ட் எடுத்துட்டுவாங்க” என்று சிஸ்டர் ஒரு சீட்டை கொடுத்தார். அதில் சிறுநீர் கார்ப்ப பரிசோதனை செய்து, முடிவுகளை கொண்டு

Read More

மறுமணம்… திருமணம்… புதுமணம்… – #கவிதை

ஆயிரம் முறை பார்த்திருப்பேன் அவளின் புகைப்படத்தை... அன்று முதன்முதலில் பார்த்தேன் நேரில் அவள் தேவதை... மறுமணம் வேண்டாம் என்றிருந்தேன் அதுவரை... திருமணம் அவளுடன் தான் என்று எழுதினேன் முடிவுரை... பேச துடித்தேன் அவளிடம்... பேசியதும் அவளிடம் அடைந்தேன் புகழிடம்... நிச்சயக்கப்பட்ட திருமணம்... காதல் திருமணமாய் ஆனது... என் மனம் திறந்து... இந்த உலகம் மறந்து... சுற்றம் எல்லாம் துறந்து... அவள் மேல் பிறந்தது பித்து... எனக்கு அவளொரு முத்து... என் வலிகளெல்லாம் அழித்து... புது வாழ்க்கை கொடுத்தாள் அமைத்து... எனக்குள் அவள் அன்பை விதைத்து... எல்லையில்லாமல் காதலித்து... இன்பத்தை அணிவகுத்து... துன்பத்தை கருவறுத்து... என்னையே மறகடித்து... மறுமணமான திருமணத்தை... ஆக்கினாள் அவள்... புதுமணமாய்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 42

நாற்பத்தி ஒன்றாவது பகுதியின் லிங்க்... இன்னும் சில நிமிடங்களில் நான் பயணிக்கும் விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்க போகிறது. என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார்களோ என்று தெரியவில்லை. என் நண்பர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம். பல நாட்களாக திட்டமிட்ட ஒரு காரியம் நடக்காமல் போனால் கோபம் வருவது இயல்புதானே. நான் விமானத்தை தவறவிட்டுவிட்டேன், எப்போது மற்றுவிமானம் பிடித்து கோவை வருவேன் என்று தெரியாது. ஆதனால், நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 41

நாற்பதாவது பகுதியின் லிங்க்... தாத்தாவும் நானும் சோபனாவுடன் தாத்தாவின் மலாட் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் யாரும் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்தோம். சோபனா சமயலறைக்குச் சென்று மூவருக்கும் காபி போட்டுக்கொண்டு வந்தாள். அந்த நேரத்தில் அந்த காபி எனக்கு மிகவும் தேவையானதாக இருந்தது. நாங்கள் வீட்டிற்கு வருவதற்குள் சூரியன் மறைந்திருந்தது. காபி குடித்துவிட்டு, டம்ளரை அடுப்படியில் கழுவி வைத்துவிட்டு, நானும் சோபனாவும் பாட்டியின் அறையில் இருந்தோம். “திவ்யா” என்று தாத்தா என்னை அழைத்தார். “என்ன

Read More