Saturday, April 20, 2024
Home > #சமூகம்

பெண்கள் தினமாம்… – #கவிதை

பெண்கள் தினமாம்... பெண்கள் தினமாம்... ஆண்டுதோறும் கேலிக்கூத்தான வியாபாரமாக மாறிவிட்ட பெண்கள் தினமாம்... பெண்ணிற்கு அந்த ஒரு நாள் மட்டும் தான் கொண்டாட்டமா? மற்ற எல்லா நாட்களிலும் பெண்ணிற்கு என்ன திண்டாட்டமா? பெண்ணிற்கு தனியாக தினம் வைத்துக் கொண்டாடும் சமூகமே... பெண்ணிற்கு என்று... எப்போது தரப்போகிறாய்... பாதுக்காப்பை...? எப்போது தரப்போகிறாய்... உடல் சுதந்திரத்தை...? எப்போது தரப்போகிறாய்... பெண்ணுரிமை...? எப்போது தரப்போகிறாய்... உண்மையான சொத்துரிமை...? எப்போது தரப்போகிறாய்... வாழ்க்கைத்துணைத் தேர்வுரிமை...? எப்போது தரப்போகிறாய்... அரசியலுரிமை...? எப்போது தரப்போகிறாய்... முழு சுதந்திரம்...? அதுவரை... வேண்டாமே ஆண்டிற்கொரு முறை பெண்கள் தினம்... எப்போதும் வேண்டாமே... ஆணிற்கென்று தனியொரு தினம்... ஆண் பெண்ணாக முடியாது... பெண் ஆணாகவும் முடியாது... ஆனாலும்

Read More

உதவிகேட்ட உன்னை… #Priyanka #JusticeForPriyanka

உதவிகேட்க வைத்து... உதவிகேட்ட உன்னை... உடைகளைக் களைந்து... உன் அனுமதியின்றி... உன்னுடலின் உள்ளே... ஊடுருவி விட்டார்களே... உயிரையும் எடுத்துவிட்டார்களே... கரிக்கட்டயாய் கிடந்தாயே... என் நாட்டின் திருமகளே...   நயவஞ்சகர்களின் நரித்தனத்திற்கு நீ பலியாகிவிட்டாயே... உன்னை கசக்கி எறிந்துவிட்டார்களே... உன்னுடலில் அவர்களின் நஞ்சைவிதைத்து... உன்னையும் கொன்று எரித்துவிட்டார்களே...   வீறு கொண்டு நீ வருவாய்... அவர்களிடம் நியாயம் கேட்க வருவாய்... என்ற பயத்திலே... கோழைத்தனமாய்... உன்னுயிரையும் பறித்துவிட்டார்களே...   நல்லவர்கள் இங்கு சிலரே... அத்துமீற துடிப்பவர்கள் இங்கு பலரே... மாட்டிக்கொண்டவர்கள் இங்கு சிலரே... நல்லவர் வேடமிடுபவர்கள் இங்கு பலரே... நீதியின் முன் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிலரே... நீதியாலே தப்பித்தவர்கள் இங்கு பலரே... பாலியல் தீண்டலுக்கு ஆளாத பெண்கள் இங்கு சிலரே... அநீதியிளைக்கப்பட்ட

Read More

கண்ணம்மா… போயிட்டியே என்னிடம் சொல்லாமல்…

நெடுநாட்களாக மனதை வருடிக்கொண்டிருந்த ஒரு அநீதியைப் பற்றியே இக்கட்டுரை. இந்த அநீதி நிகழும் பொழுது, என்னால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அதனை நினைத்து நினைத்து, என் தலையனையில், பல நாட்கள் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். என்னை மிகவும் பாதித்த அந்த சம்பவம் இதோ, ஒரு நாள் என் பெரியப்பா, மிகவும் பதற்றமாக என் தந்தையைக் காண வந்திருந்தார். அவர் வீட்டில் இல்லாததால், என்னிடம் சிறிது நேரம் நாட்டு நடப்புகளைப் பேசிவிட்டுச் சென்றார். மாலையில் வந்த

Read More

சபரிமலையும் பெண்களும்

“மாதவிடாய் காலங்களில் எங்களது நாப்கினை பயன்படுத்தினால், நீளம் தாண்டலாம், உயரம் தாண்டலாம், நேடுந்தூரம் ஓடலாம், ஆடிப்பாடி விளையாடலாம் என்று விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள்.... சுத்தமான எங்கள் நாப்கினை பயன்படுத்தினால், கோவில்களில் விளக்கேற்றலாம்... திருமணங்களுக்குச் செல்லலாம்... பிற மங்கல காரியங்களில் ஈடுபடலாம்... பிறர் வீட்டிற்கு சுக, துக்கங்களுக்குச் செல்லலாம்... என்று விளம்பரம் தருவார்களா?” என்று ஒரு பெண் கவிஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வினா எழுப்பியிருந்தார். ஆழமான கேள்வி, இந்தக்கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்களை நாம் சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. அதில்

Read More

ஸ்பெஷல் காதல்…

ஸ்பெஷல் காதல்... மாற்று மாப்பிள்ளை... குருடர்களை பற்றிய ஒரு கதை இருக்கிறது. நான்கு குருடர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள், ஒரு நாள் குளத்திற்கு குளிக்கச் செல்லும் வழியில் ஒரு யானையும், யானைப் பாகனும் எதிரே வருகிறார்கள். குருடர்கள் நால்வரும் யானைக்கு மிக அருகில் வந்த பொழுது, யானை வருகிறது சற்று தள்ளி போகுமாறு பாகன் அவர்களை அதட்டுகிறான். இதுவரை யானைகளைப் பற்றிய கதைகளை காதால் மட்டுமே கேட்ட குருடர்கள், யானை எப்படி இருக்கும்

Read More