Friday, March 29, 2024
Home > #பெண் (Page 8)

நீங்க ஆம்பளையா…!

என் நண்பன் தன் வருங்கால மனைவியிற்கு, காதலர் தினத்தன்று புத்தாடை பரிசு வழங்க எண்ணினான். ஆதலால், நானும் என் நண்பனும் பிராண்ட் பேக்ட்ரி கடைக்குச் சென்றோம். அங்கே நடந்த ஒரு சம்பவமே இக்கதையின் கரு. மிக பிரமண்டமான கடை. பெயருக்கு ஏற்றதைப்போல நிறைய நிறைய பிராண்ட்ஸ். வழக்கம் போல குழம்பிப்போய் நேடுநேரமாக தேடியும் என் நண்பன் ரியாஸ் எதனையும் தேர்வு செய்யவில்லை. எனக்கு நேரம் போக போக கடுப்பாகிவிட்டது. என் நண்பன் என்னிடம் வந்து

Read More

கருப்பி… என் கருப்பி… – #சிறுகதை

என்னை வைத்து ருத்ரதாண்டவம் ஆடியிருந்தார் எனது மேனேஜர். எப்போதும் ரிவியூ மிட்டிங்கில் நான் எப்படியாவது தப்பிவிடுவேன். இந்த முறை கோபி பைய என்னை வசமாக சிக்க வைத்துவிட்டு ஓடிவிட்டான். நானும் அவனும் டீம் லீட்ஸ். நாங்கள் ஒரே கல்லூரி, ஒரே வகுப்பு. இருந்தாலும் இந்த நிறுவனத்தில், நான் அவனுக்கு சீனியர். ஆனால், அவன் சம்பள விசியத்தில் எனக்கு சீனியர். வேலையில் படு கில்லி. இந்த முறை ஏதோ வசமாக சொதப்பிவிட்டான்.

Read More

கண்ணம்மா… போயிட்டியே என்னிடம் சொல்லாமல்…

நெடுநாட்களாக மனதை வருடிக்கொண்டிருந்த ஒரு அநீதியைப் பற்றியே இக்கட்டுரை. இந்த அநீதி நிகழும் பொழுது, என்னால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அதனை நினைத்து நினைத்து, என் தலையனையில், பல நாட்கள் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். என்னை மிகவும் பாதித்த அந்த சம்பவம் இதோ, ஒரு நாள் என் பெரியப்பா, மிகவும் பதற்றமாக என் தந்தையைக் காண வந்திருந்தார். அவர் வீட்டில் இல்லாததால், என்னிடம் சிறிது நேரம் நாட்டு நடப்புகளைப் பேசிவிட்டுச் சென்றார். மாலையில் வந்த

Read More

சபரிமலையும் பெண்களும்

“மாதவிடாய் காலங்களில் எங்களது நாப்கினை பயன்படுத்தினால், நீளம் தாண்டலாம், உயரம் தாண்டலாம், நேடுந்தூரம் ஓடலாம், ஆடிப்பாடி விளையாடலாம் என்று விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள்.... சுத்தமான எங்கள் நாப்கினை பயன்படுத்தினால், கோவில்களில் விளக்கேற்றலாம்... திருமணங்களுக்குச் செல்லலாம்... பிற மங்கல காரியங்களில் ஈடுபடலாம்... பிறர் வீட்டிற்கு சுக, துக்கங்களுக்குச் செல்லலாம்... என்று விளம்பரம் தருவார்களா?” என்று ஒரு பெண் கவிஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வினா எழுப்பியிருந்தார். ஆழமான கேள்வி, இந்தக்கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்களை நாம் சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. அதில்

Read More

ஸ்பெஷல் காதல்…

ஸ்பெஷல் காதல்... மாற்று மாப்பிள்ளை... குருடர்களை பற்றிய ஒரு கதை இருக்கிறது. நான்கு குருடர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள், ஒரு நாள் குளத்திற்கு குளிக்கச் செல்லும் வழியில் ஒரு யானையும், யானைப் பாகனும் எதிரே வருகிறார்கள். குருடர்கள் நால்வரும் யானைக்கு மிக அருகில் வந்த பொழுது, யானை வருகிறது சற்று தள்ளி போகுமாறு பாகன் அவர்களை அதட்டுகிறான். இதுவரை யானைகளைப் பற்றிய கதைகளை காதால் மட்டுமே கேட்ட குருடர்கள், யானை எப்படி இருக்கும்

Read More