Wednesday, April 24, 2024
Home > இலக்கு > வரலாறு

வரலாறு

     வரலாறு என்பது மிக முக்கியம் தான். ஆனால் அது யாருக்கு முக்கியம் என்பதில் தான் பிரச்சனை. ஏன் வரலாறு மட்டும் எப்போதும் சர்ச்சைக்கு உட்பட்டே இருக்கிறது. ஏன்னென்றால், வரலாறு என்பது சுயபுராணமாகவோ விமர்சனமாகவோ தான் எப்போதும் இருக்கிறது, இருக்கும். எங்கே சுயபுராணமும், விமர்சனமும் இருக்கிறதோ, அங்கே நிச்சயம் சர்ச்சைக்கும் குழப்பங்களுக்கும் இடமிருக்கும்.

  • ஏன் வென்றவன் எழுதிய வரலாறு மட்டும் காலம் தாண்டியும் நிற்கின்றது?
  • ஏன் பெண்களின் வாழ்க்கையைப் பற்றி வரலாற்றில் அதிகமாக செய்திகள் இல்லை?
  • பெண்களுக்கு ஏன் வரலாறு இடமளிக்க மறுக்கிறது? இடமளிக்க மறுப்பது யார்?
  • வரலாறு ஏன் எப்போதும் ஆண்களின் புராணமாகவே இருக்கிறது?
  • ஏன் பொது மக்கள் பார்வைக்கு தோற்றவனின் வரலாறு என்றும் காட்டப்படுவதேயில்லை?
  • ஏன் வென்றவனை மட்டும் உலகம் கொண்டாடுகிறது?
  • தோல்வியில் இருந்து பாடம் கற்க சொல்லி உபதேசிக்கப் படுகிற அதே வேலையில் தோற்றவனின் பக்கத்தில் இருந்து பார்த்தால் தானே பாடம் கற்க முடியும்? தோற்றவனின் கோணத்திலிருந்து பார்க்க தோற்றவனின் வரலாறும் வேண்டுமே?
  • வரலாறு யாரால் எழுதப்படுகிறது, யாருக்காக எழுதப்படுகிறது?

     இப்படியான பல கேள்விகளுக்கு பட்டிக்காடு தளத்தில் விரிவாக, விவரமாக, ஆதாரங்களுடன் நிறையவே விவாதிக்கப் போகிறோம். அதேசமயம், வரலாற்றையும், மொழியையும் தெரியாமல் ஒரு குழந்தை வளர்வது பேராபத்து. ஆனால் நம் தமிழ்நாட்டில் மொழியையும், வரலாற்றையும் நிராகரித்து  ஒரு சமுதாயமே வளர்கிறதே. நம் தாய் மொழியை நாமே அழிக்கிறோமே. எப்போது ஒரு மொழி அழிகிறதோ அப்போதே ஒரு நாகரிகத்தின் பண்பாடும், அடையாளங்களும், வரலாறும் அதனுடனே அழிந்து போகும்.

     ஆகவே தான், தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்க இந்த பட்டுக்காடு தளத்தின் மூலம், வாழ்க்கையை அர்ப்பணிக்கப் போகிறான். என்னுடன் பயணிக்கும் சமுதாயத்திற்கு எனது பணியின் வீரியமும், முக்கியத்துவமும் புரியாமல் இருக்கலாம். புரியாமல் இருந்துவிட்டு போகட்டுமே, ஆனால் எதிர்காலத்தில் ஒரு நாள், என் எழுத்தும் நாகரிகத்தை புரிந்துக் கொள்ள  உதவும்.

ஆக எனது ஐந்தாவது வரையறை யாதெனில்,

     ”வரலாறு என்பது அவரவர் வசதிக்கேற்ப திருத்தப்படுகிறது. பட்டிக்காடு தளம் வரலாற்றிலுள்ள மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, அதிகம் விவாதிக்கப்படாத அர்த்தங்களைத் தேடும், விவாதிக்கும். வரலாற்றை மறு கட்டமைப்பு செய்வதே தளத்தின் நோக்கம்”

     –     வரலாற்றை மீட்ப்போம்