Wednesday, November 20, 2019
Home > பயண அனுபவம் > போட்டு தாக்கனும்… தலை கீழ போட்டு திருப்பனும்… – #பயண அனுபவம்-6

போட்டு தாக்கனும்… தலை கீழ போட்டு திருப்பனும்… – #பயண அனுபவம்-6

மேட்டர் நடந்த அன்று… (என்னது மேட்டரா? என்று நீங்கள் நினைக்கிறது புரியுது… அந்த சீன் எல்லாம் இங்க இல்லங்க… )

இரவு 10.30 மணி…

சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே இருக்கும் தனியார் சொகுசு பேருந்து அலுவலகத்தின் அருகே அன்று நின்றிருந்தேன். என் நண்பர் ஒருவர், திருச்சியில் இருந்து பெங்களூருவிற்கு செல்லும் அந்த தனியார் நிறுவனத்தின் சொகுசு பேருந்தில் வந்துக் கொண்டிருந்தார். சேலத்தில் அந்த பேருந்து 10-15 நிமிடங்கள் நிற்கும். அப்பொழுது அவரை சந்தித்து சில நிமிடங்கள் பேசிவிட்டு, நான் செங்கல்பட்டுவிற்கு பேருந்து ஏறுவது தான் என் திட்டம்.

அவர் வரும் பேருந்து அப்பொழுது தான், நாமக்கல் தாண்டியிருந்தது. எப்படியும் இன்னும் ஒரு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். ஆனால் நேரம் நகர மாட்டேன் என் அடம்பிடித்தது. பேருந்து நிலையத்தை இரண்டு முறை சுற்றி வந்திருந்தேன். ஆனால் ஐந்து நிமிடங்கள் தான் கடந்திருந்தது.

அவர் வரும் வரை இணையத்தில் ஏதேனும் உலாவலாம் என்று கைபேசியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தேன். அதுவும் அன்றைக்கு சுவரசியமாய் எதுவுமேயில்லை. அதனால், சாலையில் செல்கின்ற வாகனங்களையும், பேருந்திற்காக காத்திருப்பவர்களையும், ஆங்காங்கே இரவு தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்களையும் நோட்டம் விட துவங்கினேன். ( உண்மையிலையே அப்போ நான் சைட் அடிக்கல…  நம்புங்க…)

அப்பொழுது ஒரு 20-22 வயது மிக்க ஒரு பெண் சாலையின் மறுபுறம் வந்து நின்றாள். மாநிறமாக இருந்த அவளை அவ்வளவாகப் பார்க்கவில்லை. ஆனால், நெற்றியில் சிறியதாக ஒரு பொட்டு, மையிட்ட கருமையான கருவிழிகள், லேசான உதட்டுச் சாயம், தலையில் ஒரு சிவப்பு ரோசா, ஒரு கை மணிக்கட்டில் வளையல், இன்னொரு கையில் சில்வர் வாட்ச், ஒரு கைப்பை, கருப்பு வெள்ளை கலந்த சேலையில் பார்க்க லட்சனமாக இருந்தாள். (இதுக்குப் பேர் தான் உங்க ஊர்ல அவ்வளவாக பார்க்காததா? என்று தயவு கூர்ந்து கேட்காதீங்களேன்… )

சாலையை கடந்து என் அருகிலே வந்து நின்றாள்.

“போகாதே… தள்ளிப் போகாதே…” என்று அவளின் மொபைல் ரிங்டோன் ஒலித்தது. என்னுடல் ஒரு சில நொடிகள் மெய்சிலிர்த்து, சில வினாடிகள் என் இதயம் துடிக்க மறந்துவிட்டது, மீண்டும் மிக வேகமாக இயங்கத் துவங்கிய பொழுது அது என் காதுகளில் பாடலாய் ஒலித்தது. அந்த இடத்தில் நான் என்னையே மறந்து நின்றேன். ( தப்பு… தப்பு… இத நீங்க… ஜோல்லுன்னு சொல்ல கூடாது… )

மெய் மறந்து நின்றேன். சிம்பு பட பாணியில் செல்வதென்றால்,

“காதல்…

அதுவா வரனும்…

நம்மள போட்டு தாக்கனும்…

தலை கீழ போட்டு திருப்பனும்…”

என்கின்ற அளவுக்கு ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு எனக்குள் ஏற்பட்டு கொண்டிருந்தது. சற்று தள்ளியிருந்த அவளின் அருகே சென்று நின்றேன். என் தலை முடியை சரி செய்வதைப் போல அவளைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்தாள். என் கண்கள் அவள் கண்களைப் பார்த்தது. மாறி மாறி பார்த்துப் பார்த்து பார்வையாலேயே அவளுடன் வாழத்துவங்கியிருந்தேன். என் காதுகளில் இளையராஜாவில் காதல் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அவளைப் பார்க்க பார்க்க அவளின் கண்கள் பிரகசமடைந்துக் கொண்டிருந்தன.

“வரியா…?” என்றொரு குரல் கேட்டது.

நான் காதில் ஹெட்போன் மாட்டி பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததால் சரியாக கேட்கவில்லை. எதோ சப்தம் கேட்கிறது என்று திரும்பிப் பார்த்தேன். அவள் தான். என்னருகில் நின்றிருந்தாள். அவளின் மூச்சு சப்தம் கேட்கும் அளவிற்கு அருகில் நின்றுக் கொண்டிருந்தாள்.

மீண்டும் ஒரு முறை “வரியா…?” என்று கேட்டாள். எனக்கு ஒன்றும் புரியலில்லை. ஆனால் அவள் ஏதோ சொல்ல வருகிறாள் என்று தான் முதலில் நினைத்திருந்தேன்.

மெல்ல என் அருகில் வந்தாள்.

வந்தவள், என் கையை பிடித்தாள், என் கண்கள் அவள் கண்களைப் பார்த்தன, அவள் கண்கள் பிரகாசத்துடன் என் கண்களைப் பார்த்தன.

அப்பொழுது…

“என்ன… வரியா?” என்று மீண்டும் ஒரு முறை கண்ணடித்துக் கேட்டாள்.

பல்ப் எரிந்தது. உடலில் அட்ரிலின் அதிகமாக சுரந்தது.

துள்ளி குதித்தேன். அவள் கையை உதறினேன்.

ஒட்டமேடுத்தேன்.

ஓடினேன்…

ஓடினேன்…

ஓடினேன்…

சேலம் பேருந்து நிலையத்திருந்து செங்கல்பட்டு நோக்கி பயணிக்கும் பேருந்தை நோக்கி ஓடினேன்.

பேருந்தில் ஏறியதும் மீண்டும் ஓடினேன்.

டிரைவர் சீட்டு வரை ஓடினேன்.

அங்கே கண்ணாடியிருந்ததால் திரும்பி வந்து ஜன்னல் சீட்டில் அமர்ந்துக் கொண்டேன்.

இரவு பயணம் முழுவதும், என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது அவள் குரல்,

– வரியா வரியா வரியா என்று…

 

3 thoughts on “போட்டு தாக்கனும்… தலை கீழ போட்டு திருப்பனும்… – #பயண அனுபவம்-6

    1. அது மேட்டர்னு அப்ப எனக்கு தெரியாது நண்பரே…

  1. “வரியா வரியா வரியா என்று…

    Dhaya..Now its Selvaragavan song…

    வரியா வரியா வரியா என்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *