Tuesday, April 23, 2024
Home > பெண் > நீங்க SHUT UP பண்ணுங்க

நீங்க SHUT UP பண்ணுங்க

தலைப்பே சொல்லிவிடும், இப்பதிவு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கும் நடிகை ஓவியாவைப் பற்றியது என்று. காரணம் “நீங்க சட் அப் பண்ணுங்க” என்ற பஞ்ச் வசனத்தின் வீரியம் அப்படி. இப்பதிவின் நோக்கம் ஓவியாவிற்கு வாக்கு சேகரிப்பதல்ல. மாறாக, ஓவியாவிற்கு ஏன் இவ்வளவு வாக்குகள் கிடைக்கின்றது என்பதனை விளக்கவே இப்பதிவு.

இன்றய தேதியில் (21/07/2017-வெள்ளி) அனுயா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி ஆகிய மூவரும் மக்கள் வாக்களித்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இம்மூவரும் வெளியேற்ற மக்களுக்கு பல்வேறு காரணங்கள் கிடைத்தது. இவர்களுடன் பெரும்பாலும் வெறியேற்றப்பட நடந்த வாக்களிப்பில் பரணியும், ஓவியாவும் போட்டியாளர்களாக இருந்தனர். மக்கள் இவர்கள் இருவரையும் வெளியேற்ற நினைக்கவில்லை. ஆதலால், மக்கள் இவர்களுக்கு வாக்களித்து காப்பற்றினர். அதே சமயம், ஸ்ரீயும், பரணியும் வெவ்வேறு காரணங்களுக்காக பிக்பாஸ் வெளியேற்றியுள்ளார்.

முதலில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்குத் தெரியும், பரணி எப்படி வெளியேற்றப்பட்டார் என்பது. மக்களின் அனுதாபத்தை முழுவதும் சம்பாதித்தவர் பரணி. அவர் வெளியேற்றப்பட்ட விதம் தமிழக மக்களிடையே மிகுந்த மனக்குமுறலை ஏற்படுத்திவிட்டது. அதன் சுருக்கம் இதோ.

பரணி தான் வெளியேறப்போகிறார் என பிக்பாஸ் வீட்டின் அங்கத்தின் பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தனர். மக்களின் வாக்கு மாறாக இருந்தது, கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டார். இதனை சற்றும் எதிர்பாராத பிக்பாஸ் வீட்டுப் பெண்கள், பரணி மீது “பொம்மள பொறுக்கி” பட்டத்தைக் கட்டி உண்ணாவிரதம் இருக்க, அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டிய ஆண்களும் அமைதியாக இருக்க, பரணி கோபம் கொண்டு தப்பிக்க முயல, அதையே காரணம் காட்டி, அவரை வீட்டில் இருந்து பிக்பாஸ் வெளியேற்றினார். பரணி வீட்டை விட்டு செல்லும் பொழுது, ஓவியா மட்டுமே அவருக்கு “பை பரணி” என்று சொன்னார். மேலும், பரணியை இப்படி வெளியேற்றி இருக்க கூடாது என்று ரைசாவிடமும் சொல்லி புலம்பினாள். இது பிக்பாஸ் வீட்டுப் பெண்களுக்கு ஓவியா மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஓவியாவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கிறது என்பதால் நமிதாவும், காயத்ரியும், ஜூலியும் ஓவியா மீது பொறாமையில் உள்ளனர். இது தான் சமயம் என்று, ஓவியாவை ஒதுக்கவும், வம்பிழுக்கவும் செய்கின்றனர்.

ஓவியாவோ, தான் சிறு வயது தான் என்றாலும், மிகவும் பக்குவமாக நடந்துக்கொள்கிறார். எல்லோரிடம் நியாயமாக பேசுகிறார், மனதில் பட்டதை சொல்கிறார். யாரிடமும் வம்பு தும்புக்கு போகாமல் இருக்கிறார். ஓவியாவின் செயல்பாடுகளை பார்க்கும் மக்களுக்கு அவர் செய்வது சரி என்று படுகிறது. அதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர வேண்டும் என மக்கள் அதிக அளவில் வாக்களித்து வருகின்றனர். இரண்டு, மூன்று வாரங்களாக இதே மாதிரி நடப்பதால், பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஓவியா மீது பொறாமையில் உள்ளனர். அதிலும், இன்று (21/07/2017-வெள்ளி) ஜூலி, நமீதா மற்றும் காயத்ரி ஆகியோர் ஓவியாவை தூங்க விடாமல் செய்தது, கொடுமைகளின் உச்சம். இதில் ஜூலி சொல்கிறார் “ஓவியா நடிக்கிறார்” என்று, மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், அவர்களுக்கு தெரியும் யார் நடிக்கிறார்கள், யார் நாறடிக்கிறார்கள் என்று. சரி, நாம் இப்பதிவின் முக்கிய நோக்கத்திற்கு வருவோம். ஏன் ஓவியாவிற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கிறது.

முதலில், ஆண்கள் ஏன் ஓவியாவிற்கு ஆதரவு தருகிறார்கள் என்று பார்ப்போம். ஓவியாவிற்கு ஆண்கள் அதிக அளவில் ஆதரவு தர முக்கிய காரணம், அவரது கவர்ச்சியோ, நடிகை என்பதனாலோ அல்ல. அவரது குணமும், பொறுமையும் தன் மிக மிக முக்கிய காரணம். தற்போதய நிலையில் ஆண்களைச் சுற்றி இருக்கும் பெண்களில் பெரும்பாலும், பொறாமை பிடித்த நமீதா மாதிரியோ, சாதித் திமிரும், சுயநலமும் பிடித்த காயத்ரி மாதிரியோ, ஆர்வக்கோளாரும் நஞ்சும் கொண்ட ஜூலி மாதிரியோ தான் இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் எதிர்பார்ப்பது, தனக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் அதனை கண்டுக்கொள்ளாமல், மற்றவர்களை பற்றி தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்கவும், மற்றவர்களின் குறைகளை சுட்டிக்காட்டாமலும், எதையும் எதிர்பாராமல் பிறருக்கு உதவும் குணமும், எதையும் பிரக்டிக்கலாக எடுத்துக் கொள்ளும் குணமும், தனக்கு சரி என பட்டதைச் செய்யும் பெண்களைத் தான் ஆண்களுக்கு பிடித்திருக்கிறது. காலங்காலமாக இப்படிப்பட்ட பெண்களுக்குத் தான் ஆண்கள் ஆதரவு கொடுத்து வந்துள்ளனர். இது தான் ஆண்கள் மத்தியில் ஓவியாவிற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்க முக்கிய காரணமாக இருந்து வருகிறது. அதே சமயம், ஓவியா திமிர் பிடித்தவர், யாருக்கும் அடங்காதவர் என்று ஆண்கள் எண்ணினால் அவரை தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள்.

அதே சமயம், பெண்கள் ஏன் ஓவியாவிற்கு ஆதரவு தருகிறார்கள் என்றால், அவரைப் போல தங்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை என்பது முக்கிய காரணம். மேலும், ஓவியாவை எல்லோரும் புறக்கணிப்பதும், பெண்கள் மத்தியில் ஒவியாவிற்கு ஒரு அனுதாப அலையை உருவாக்கி இருப்பதை மறுக்க முடியாது. உன்னிப்பாக கவனித்தோமானால், ஜூலி வயற்று வலியால் துடித்த பொழுது, மற்ற பெண்கள் எல்லோரும் அவள் நடிக்கிறாள் என்று சொல்லி, உதவாமல் இருந்த பொழுதும், ஓவியா மட்டுமே உதவினாள். எல்லா பெண்களும் ஓவியாவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும், ஓவியாவை தூக்கி எறிந்துவிட்டு காயத்ரியை ஆதரிக்க வாய்ப்பு இருக்கிறது. இன்னும் 75 நாட்கள் இருக்கிறது, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

முடிவாக, கமல் சொல்வதனைப் போல், பிக்பாஸ் “சோசியல் எக்ஸ்பெரிமெண்டாகவும்” இருக்கலாம். அல்லது, நமது செட்டிசன்கள் சொல்வது போல், இது பிக்பாஸ் செய்கின்ற டிராமாகவும் இருக்கலாம். இந்நிகழ்ச்சி சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம், நமது கலாச்சாரத்தை மேப்படுத்தலாம். ஆனால் கண்டிப்பாக நமது கலாச்சாரத்தை இந்நிகழ்ச்சி மட்டுப்படுத்தாது என்பதே உண்மை. யார் வேண்டுமானாலும், வெற்றி பெறலாம். என்ன நான் சொல்றது சரிதானே.

அதுவரை…

– நீங்க SHUT UP பண்ணுங்க…