Thursday, March 28, 2024
Home > இலக்கு > உண்மைக்கு மிக அருகில்

உண்மைக்கு மிக அருகில்

உண்மை. இந்த வார்த்தைக்கு அகராதியில் என்ன அர்த்தம் என்று தெரியுமா? பொய் அல்லாதது, மறுக்க முடியாதது அல்லது சத்தியமானது, இவை தான் உண்மையின் உண்மையான அர்த்தம். இன்று, நமக்கு வரும் செய்திகளில் யாவும் நம்பகத்தண்மை வாய்ந்தவையா? என கேள்வி எழுகிறது. ஆனால் உண்மையான ”உண்மை” ஒரு சிலருக்கு மட்டுமே அதுவும் காலம் கடந்த பிறகே தெரிய வருகிறது.

ஒவ்வொரு உண்மையிலும் ஒரு பொய் ஒளிந்திருக்கிறது. அதேசமயம் ஒவ்வொரு பொய்யிலும் ஒரு உண்மை இருக்கவே செய்கிறது.

ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.

செய்தி: யானைகள் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

விவரங்களில் சில:

    • யானைகளின் பல நூற்றாண்டு கால பயணப் பாதைகளை மனிதன் ஆக்கிரமித்து விவசாயம் செய்துக் கொண்டிருக்கிறான்.
    • வனங்கள் அழிவதனால், யானைகள் பசியாற வளமான விவசாய பகுதிகளை நோக்கிப் பயணிக்கின்றன.
    • காடுகளும், வனங்களும் சுரண்டப்படுவதனால், வேறு வழியில்லாமல் யானைகள் ஊருக்குள் படையெடுக்கின்றன.
    • மலைப்பகுதிகளில், காடுகளிலும் பணப்பயிர்கள் பல்கிப் பெருகியதால் யானைகள் அலைந்துத் திரிய இடமில்லாமல் அங்கிருந்து வெளியேறுகின்றன.
    • காடுகளில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதனால், தண்ணீர் தேடி அவை அங்குமிங்கும் அலைகின்றன.
    • யானைகள் உணவு தேடி அலையும் பொழுது அவை எவ்வளவு பசியுடன் இருக்கும். அதனை சீண்ட முயற்சித்தால் என்னவாகும், யானைகள் எதிர்ப்புக் காட்டத்தான் செய்யும்.

உண்மையாக வர வேண்டியச் செய்தி:

”யானைகளின் பாதைகளை ஆக்கிரமித்த மனிதர்களை யானைகள் ஓட ஒட விரட்டின” என்பது தானே செய்தியாக வரவேண்டும்.

ஆனால்,

    • ஏன் இதுவரை அப்படி ஒரு செய்தி வந்ததில்லை?
    • ஏன் இதுவரை எந்த ஒரு மேல்தட்டு மக்களையும் யானைகள் இதுவரை சீண்டவில்லை?
    • ஏன் இதுவரை யானைகளின் பாதையை ஆக்கிரமித்தவர்ளுக்கு எதிராக எந்த அரசும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை?
    • ஏன் அரசியல் கட்சிகள் யானைகளின் நலனுக்காக எந்த குரலும் கொடுக்க மறுக்கின்றன?
    • ஏன் புளுகிராஸ் போன்ற அமைப்புகள் யானைகளுக்காக போராடமல் அமைதியை கடைப்பிடிக்கின்றன? ஏன் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை போராடி தடை வாங்கியவர்களுக்கு, யானைகளின் மேல் இப்படியொரு மாற்றாந் தாய் மனப்பான்மை?

         இப்படி ஏன்? ஏன்? ஏன்? என எழும் கேள்விகளை விவாதிக்கவே இத்தளம் முயற்சி செய்யும். யானைகளின் பிரச்சனைகளைப் பற்றி விரிவாக அலசுவோம்.

     உண்மைகள் இருக்கும் திசையை நோக்கி இத்தளத்தின் கருத்துக்கள் இருக்குமோ தவிர உண்மை இது தான் என உரைக்கும் தளமாக இராது. மேலும் எல்லா பொய்களும் உண்மைகளின் மேல் தான் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆக உண்மையை தேடுவதைவிட நம்மை சுற்றியுள்ள பொய்களை தூசி தட்டினாலே உண்மை தானாக வெளிப்படும்.

என் இரண்டாவது வரையறை யாதெனில்,

வாசகர்களை, உண்மைக்கு மிக அருகில், கொண்டு சேர்ப்பதே இத்தளத்தின் பாணி. உண்மைகள் இது தான் என்று முடிவு செய்வது வாசகராகத் தான் இருக்க வேண்டும். அப்போது தான் சமூக மேம்பட்டுக் கொண்டிருக்கிறது என அர்த்தம்.

–     உண்மைகளில் உண்மையைத் தேடுவோமா…

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
M.Karthica
8 years ago

Super Anna..keep rocking

kokila
kokila
8 years ago

Leading to a new way of thinking.awesome keep it up