Friday, April 19, 2024
Home > கவிதை > தியாகத்திற்கு… துரோகம் செய்தேன்… – #கவிதை

தியாகத்திற்கு… துரோகம் செய்தேன்… – #கவிதை

நல்ல உள்ளம் கொண்டவள் அவள்…

எனக்காக எதையும் செய்யத் துணிந்தவள் அவள்…

நான் வியக்கும் திறமைசாலி அவள்…

நான் இரசித்த அழகியும் அவள்…

அவளுக்கு நான் செய்துவிட்டேன்…

ஒர் அநீதி…

அவள் தவறேதும் செய்திராமல்…

என் மேல், அவள் கொண்ட நம்பிக்கையினால் மட்டுமே…

கண்கலங்கியிருக்கிறாள்…

தலைக்குனிந்து நிற்கிறாள்…

தண்டனை ஏந்தியிருக்கிறாள்…

என்னைக் காத்துக்கொள்ள, அவளை பலி கொடுத்துவிட்டேனே…

அதனால்…

அவள் மனம் என்ன வேதனைப் பட்டிருக்கும்…

என்னைக் காட்டிக்கொடுக்காமல்…

யாரிடமும் எதையும் சொல்லாமல்…

உண்மையெல்லாம் அவள் மனதிலேயே புதைத்து…

என்னை நல்லவனாக்கி…

அவள் கெட்டவளாகி…

நெஞ்சி ஏந்தி நிற்கிறாளே என் தண்டனையை…

நான் செய்தது துரோகம்…

அவள் செய்தது தியாகம்…

என்ன செய்வேன் அவளுக்கு நான் கைமாறாய்…

என் உயிர் கொடுத்தாலும் சமமாகாதே…

தவறு செய்ததும் நான்…

அநீதியிழைத்ததும் நான்…

நான் செய்ததும் ஒரு வகையில் ஊழல் தான்…

ஆக…

நானே தான் குற்றவாளி…

ஆனால் தண்டனை ஏன் அவளுக்கு…

அவள் பெண் என்பதனாலா…?

என் நெஞ்சிக்கு ஈரமேயில்லையா…?

எனக்கு இரக்கமேயில்லையா…?

நான் மனிதனேயில்லையா…?

வெட்கத்தால் தலைகுனிகிறேன்…

அவளின் தாயகத்தின் முன்னால்…

தவறிழைத்துவிட்டேன்…

என் சுயநலனுக்காக…

என்னை நம்பியவளின் கழுத்தறுத்தேன்…

என் வாழ்நாளில் எனக்கு மன்னிப்பே கிடையாது…

என் மீது கறை படிந்துவிட்டது…

நீக்க முடியாத கறை அது…

ஒரு பெண்ணின் கண்ணீர் கறை…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

மார்ச் 21, 2020

மதியம் 02:30 மணி…