Friday, March 29, 2024
Home > கவிதை > இனி நான் என்ன செய்வேன்…? – #கவிதை

இனி நான் என்ன செய்வேன்…? – #கவிதை

தவறேன தெரிந்தும்…

தவறு செய்தேன்…

இழிவென தெரிந்தும்…

துணிந்து செய்தேன்…

மடமையென தெரிந்தும்…

முடிவு செய்தேன்…

உண்மையென தெரிந்தும்…

ஊழல் செய்தேன்…

என்னையும் பாதிக்கும் எனத் தெரிந்தும்…

பாவம் செய்தேன்…

என்னை நீ நம்புவது தெரிந்தும்..

நான் உனக்கு மோசம் செய்தேன்…

உன் நற்குணம் தெரிந்தும்…

உனக்கு நான் தீமை செய்தேன்…

என் மாண்பு தெரிந்தும்…

மானங்கெட்ட அந்தச் செயலைச் செய்தேன்…

எல்லாம் தெரிந்தும்…

இழிவு செய்தேன்…

நான் கற்ற கல்விக்கு, இனி என்ன பயன்…?

நான் பெற்ற அறிவிற்கு, இனி என்ன பயன்…?

என் கீழ்தனமான புத்திக்கு, இனி என்ன பயன்…?

தவறே செய்யாத உன்னை தண்டித்த என் நீதிக்கு, இனி என்ன பயன்…?

நான் மனிதனாய் வாழ்வதில், இனி என்ன பயன்…?

என்ன பயன்…?

என்ன பயன்…?

நான் பிறந்ததற்கே, இனி என்ன பயன்…?

ஒரு பெண்ணின் கண்ணீரை, துடைக்க முடியாமல் கூடப்போகலாம்…

ஆனால்…

ஒரு பெண்ணின் கண்ணில் ஒரு துளி கண்ணீர் வர ஒரு ஆண் காரணமாய் இருந்துவிட்டால், அவன் ஆணாய் வாழ்வதற்கு, இனி என்ன பயன்…?

இவையெல்லாம் தெரிந்தும்…

தவறு செய்தேன்…

இனி நான் என்ன செய்வேன்…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

மார்ச் 21, 2020

மதியம் 03:32 மணி…