Tuesday, April 23, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 33

ஒண்ணுமில்ல… பகுதி 33

முப்பத்தி இரண்டாவது பகுதியின் லிங்க்…

எதற்கு இத்தனை மிஸ்டு கால்கள் வந்திருக்கிறது, தாத்தாவுக்கு ஏதோனும் மருத்துவ உதவி தேவைப்பட்டிருக்குமோ? நான் குடித்துவிட்டு தூங்கியதால் ஏதோனும் விபரீதமாகியிருக்குமோ? என்று எனக்குள் பயமும் துக்கமும் ஒருசேர வந்தது. அப்படி ஏதேனும் ஆகியிருந்தால், என் வாழ்நாள் முழுவதும் அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியாதே. என் சிந்தனைகள் எங்கெங்கோ அலைப்பாய்ந்தன.

என்ன நடந்தது? என்ன நடக்கிறது? என்ன நடக்கப்போகிறது? என ஒன்றும் புரியாமல் சோபனாவைப் பார்த்தேன். என் வாழ்க்கையில் மட்டும் ஏன் விதி இப்படியெல்லாம் விளையாடுகிறது.

சோபனாவின் கையைப் பிடித்து, “தாத்தாவுக்கு ஏதும் ஆயிடுச்சா?” என்றேன்.

“அவரு நல்லா தான் டி இருக்காரு. நீ பயபடற மாதிரி ஒண்ணுமில்ல” என்றாள்.

நான் என் போனை எடுத்து, தாத்தாவிற்கு போன் அடித்தேன். அவர் எடுக்கவில்லை. மீண்டும் முயற்சி செய்தேன் அப்போதும் அவர் போனை எடுக்கவில்லை.

“அப்புறம் என்னைய எங்க கூப்பிடிற? தாத்தாவுக்கு என்ன ஆச்சி. எதுவா இருந்தாலும், உண்மைய மறைக்காம சொல்லு சோபனா”

“இது விளையாடற விசயமில்ல. சோபனா” என் கண்களில் கண்ணீர் பெருக்கொடுத்தது. நான் அவருக்கு ஏதோனும் ஆகியிருக்கக் கூடும், இவள் என்னிடம் எதையோ மறைக்கிறாள் என்று நினைத்தேன்.

“இந்த உலகத்துல எனக்கு எல்லாமே தாத்தா தான், அது உனக்கே நல்லா தெரியும்” என்று அவளிடம் சொல்லிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டேன்.

அவளுக்கு என்ன ஆறுதல் சொன்னால் நான் சாந்தம் ஆவேன் என்றே தெரியவில்லை. அவள் என்னை சமாதனப் படுத்த கடுமையாக முயற்சி செய்துக்கொண்டிருந்தாள்.

எப்படியோ என்னொன்னவோ சமாதானமெல்லாம் செய்து என்னைக் கிளப்பினாள்.

ஆனால், எங்கே என்னை அழைத்துச் சொல்லப் போகிறாள் என்று தெரியவில்லை. ஏன் அது அவளுக்கே தெரியவில்லை. என்னை விட அவள் குழப்பத்தில் இருக்கிறாள் என்று மட்டும் எனக்கு புரிந்தது. அவளுக்கு ஏதோ தாத்தாவைப் பற்றிய செய்தி தெரிந்திருக்கிறது. அதனை என்னிடம் சொல்லி எனக்கு உதவியாக இருக்கலாம் என்று தான் பதட்டத்துடன் வந்திருக்கிறாள் என்று புரிந்தது.

கோரோகான் அறையைப் பூட்டிவிட்டு, சாலைக்கு வந்தோம்.

“நைட்டு அடிச்ச சரக்கு, தலைய வலிக்குது, கொஞ்சம் லஸி குடிக்கலாமா?” என்றேன் சோபனாவைப் பார்த்து.

உண்மையில் எனக்கு தலையெல்லாம் வலிக்கவில்லை. இரண்டு புல் பாட்டில் எல்லாம் ஒரே இரவில் குடித்துவிட்டு, அடுத்த நாள் சரியாக ஆபிஸிற்கு சென்ற கதையெல்லாம் உண்டு. ஆனால், சோபனாவிடம் தாத்தாவைப் பற்றிய ஏதோ செய்தியிருக்கிறது. அது என்னவென்று தெரிந்தால் தான் அடுத்தக் கட்ட நடவடிக்கையைப் பற்றி யோசிக்க முடியும். மேலும், சோபனாவிற்கு லஸி என்றால் ரொம்பவும் பிடிக்கும். அவளும் கொஞ்சம் ஆசுவாசப்படுவாள் என்றே லஸி குடிக்க அவளை அழைத்தேன்.

மறுப்போதும் சொல்லாமல் வந்தாள். ஏதோ குழப்பத்தில் இருந்தாள்.

பக்கத்தில் இருந்தக் கடையில் லஸியை ஆடர் செய்துவிட்டு அருகில் இருந்த சேரில் அமர்ந்தோம். நான் விடாமல் தாத்தாவின் மொபைல் எண்ணிற்கு முயற்சி செய்துக்கொண்டேயிருந்தேன்.

எவ்வளவு முறை அழைத்தாலும், புல் ரிங் போகும், ஆனால், யாரும் எடுத்து பேச மாட்டார்கள்.

மூன்று முறை முயற்சி செய்திருப்பேன். யாரும் எடுக்கவில்லை. அதற்குள் லஸி எங்கள் டேபிளிற்கு வந்தது. அதனை இருவரும் எடுத்துக் குடித்துக்கொண்டிருந்தோம்.

அப்போது, தாத்தா எண்ணிலிருந்து எனக்கு போன் வந்தது.

நான் வேகமாக போனை எடுத்து என் காதில் வைத்தேன்.

எதிர்முனையில் யாரோ இந்தியில் பேசினார்கள்.

“அந்தேரி போலிஸ் ஸ்டேசம் மே ஆவோ” என்று ஒரு ஆண் குரல் கேட்டது. என்னவென்று கேட்பதற்குள் போனை கட் செய்துவிட்டான் அந்த ஆசாமி.

முப்பத்தி நான்காவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு