Sunday, June 26, 2022
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 18

ஒண்ணுமில்ல… பகுதி 18

பதினேழாவது பகுதியின் லிங்க்

அவன் சொல்லியதைக் கேட்டதிலிருந்து எனக்கு கோபமே அடங்கவில்லை.

அவன் அப்படி என்ன சொன்னான் என்ற கதை இதோ.

நாங்கள் அமர்ந்திருந்த டேபிளின் மீது கார்டு மாதிரி ஒன்றை எடுத்து வைத்தான். அதில் பிரபல ஐந்து நட்சத்திர விடுதியின் முத்திரை இருந்தது.

நான் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தேன்.

அவனே பேச்சை தொடர்ந்தான்.

“ஷல் வீ கோ அவுட் பார் எ டிரிங்க். அண்ட் எஞ்சாய் த இவனிங்”

“அல்சோ வீ கேன் டிஸ்கஸ் யூவர் ப்ரொபோசல் ஓவர் தேர்” என்றான்.

நான் என்ன கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று ஒரு சில நொடிகளுக்குப் புரியவில்லை. எனக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று மெல்ல புரிந்தது.

எனக்கு கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது.

என் உடல் எல்லாம் கூசியது. எனக்கு நடுக்கம் ஏற்பட்டது.

என் கோபம் கட்டுக் கடங்காமல் எல்லை மீறிப் போனது.

என் முகம் சிவந்து, கோபத்தில் துடிக்க ஆரம்பித்தது.

என்ன தைரியம் இருந்தால் இவன் ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைக்கிறான்.

“வாட் ஆர் யூ திங்கிங் எபவுட் மீ. ஐ யம் நான் தட் கைண்ட் ஆப் யூமன்”

“ஐ யம் கோயிங் டூ ஃபைல் எ செக்ஸுயூவல் ஹாராஸ்மெட் கேஸ் எகேன்ஸ்ட்டு யூ இன் அவர் ஆபிஸ் அண்ட் வித் த போலிஸ்” என்றேன்.

அவன் கொஞ்சம் சுதாரிக்க ஆரம்பித்துவிட்டான்.

“யூ மே கோ அண்ட் ஃபைல் த கேஸ். நோ படி வில் பிலிவ் யூ. யூ ஆர் எ ஹோர்.”

“ஐ ஹவ் ஏம்பிள் காண்டேக்ட்ஸ். இஃப் யூ டோண்ட் ஃபுல்ஃபில் மை டிசையர், ஐ வில் சீ த்ரூ தட் யூவர் கேரியர் இஸ் பினிஸ்டு” என்றான்.

என்னை படுக்கைக்கு அழைத்து மட்டுமில்லாமல், என்னையே மிரட்டுகிறான். அதுவும் அவன் சொல் படி நான் கேட்கவில்லை எனில், என் வேலைக்கும் வேட்டு வைப்பேன் என்கிறான். எனக்கு எதிர்காலமே இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்கிறான்.

*********************

என் கோபம் எல்லை மீறியது.

எங்கள் டேபிளில் இருந்த தண்ணீர் கோப்பையில் இருந்த தண்ணீரை அவன் முகத்தை நோக்கி ஊற்றினேன்.

அதிர்ச்சியில் உறைந்தான்.

என் சேரில் இருந்து எழுந்தேன். அவன் அருகில் சென்று அவன் கண்ணத்தில் பளார் பளார் என்று இரண்டு அறைவிட்டேன்.

அவன் சுதாரிப்பதற்குள் அவன் சேரை தள்ளிவிட்டேன்.

அவன் கீழே விழுந்தான்.

கீழே விழுந்தவனை எட்டி உதைத்தேன்.

என் கோபம் தீரும் வரை எட்டி உதைத்தேன்.

அதற்குள் காபி டே காபி ஷாப்பின் பெண் ஊழியர்கள் வந்து என்னை பிடிக்க முயன்றனர். நான் அவர்களை தள்ளி விட்டு அவனை மீது பாய்ந்து அடிக்கத் துவங்கினேன்.

பக்கத்து டேபிளில் இருந்த டிரேவை எடுத்து அவன் தலையில் அடித்தேன்.

அவன் தலையில் இரத்தம் வர ஆரம்பித்தது.

அந்தக் கடையின் இன்னும் சில ஊழியர்கள் வந்து என்ன பிடித்து இழுத்துச் சென்றனர்.

அப்போதும் எனக்கு கோபம் அடங்கவில்லை.

நான் என்ன செய்துக்கொண்டிருக்கிறேன் என்றே எனக்கே தெரியவில்லை. என் உள்ளக் கொதிப்பு அடங்க நெடுநேரமானது.

***********************

ஒரு பெண்ணை கொஞ்சம் சிரித்து பேசினாலே, அவள் படுக்கையை பகிர்ந்துக்கொள்வாள் என்று இந்த உலகத்திலுள்ள ஆண் சமூகம் எண்ணுகிறது. பெண் என்றாலே அவள் உடல் மட்டும் தானா? அவளுக்கு விருப்பு வெறுப்பு ஏதும் இறுக்கக் கூடாதா?

அதுவும் ஐடியில் வேலை செய்யும் பெண் என்றால் கூப்பிட்ட இடத்திற்கு எல்லாம் வருவாள். பலருடன் உறவு வைத்துக்கொள்ள தயங்கமாட்டாள் என்ற தவறான பிம்பம் இங்கே உருவாகிவிட்டது. ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் இந்தத் துறையில் இருக்கிறார்கள். எல்லோரையும் கொச்சைப் படுத்தி பேசுவது இங்கே பலருக்கு பொழுதுபோக்கு.

பெண்களின் திறமையை விட அவளின் மார்பு அளவையும், இடுப்பு அளவையும் வைத்தே இங்கே பெண்களை பலரும் எடைப் போடுகிறார்கள். பெண்களுக்கு என்று திறமையே இருக்காதா? இல்லை அவர்களுக்கு கடவுள் தான் மூளையையே படைக்கவில்லையா? அவளுக்கு உடல் மட்டுமே போதும் என்று கடவுள் நினைக்கவில்லையே. ஒரு உயிரை உருவாக்கி வளர்க்கும் பொறுப்பையே கடவுள் இங்கே பெண்ணுக்குத் தானே கொடுத்திருக்கிறார். ஆனால் இந்தக் உலகிலுள்ள ஆண்களுக்கு பெண் என்றால் உடல் மட்டும் தானா?

“அவ அந்த இடத்துக்கு எப்படி வந்தா தெரியுமா? எத்த பேரு கூட படுத்தா தெரியுமா?” என்று பெண்களே பெண்களைப் பற்றி தவறாகப் பேசுவதை நானே கேட்டிருக்கிறேன்.

என்ன உலகம் இது என்று இந்த உலகின் மீதே எனக்கு வெறுப்பாக இருந்தது. நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன் என்று அவமானமாக உணர்ந்தேன்.

ஆண்கள் மீது எனக்கு இன்னும் வெறுப்புணர்ச்சி அதிகமானது.

என்னால், எதுவுமே செய்ய முடியவில்லை என எனக்கு அழுகையாக வந்தது. இவ்வளவு பெரிய மும்பை மாநகரில் நான் தனிமையை முதன் முதலில் உணர்கிறேன். இப்படி வாழ்வதற்கு செத்துவிடலாம் என்று கூட தோன்றியது. ஆனால் இங்கே நான் பாதிக்கப்பட்டவள் தானே, நான் ஏன் சாக வேண்டும். அவன் தான் சாக வேண்டும். அவனை நானே கொல்லப் போகிறேன்.

**********************

அப்போது சூசன் என்னை போனில் அழைத்தார்.

பத்தொன்பதாவது பகுதியின் லிங்க்

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்துபட்டிக்காடு