Thursday, April 25, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 21

ஒண்ணுமில்ல… பகுதி 21

இருபதாவது பகுதியில் லிங்க்…

“ஹலோ. தேவா. ஐ வில் பீ அட் மலாட் ஸ்டேசன் அட் 2.00பி.எம். ஷார்ப்” என்று என் கைடு தாஸ் போன் அடித்தார்.

(இந்த தாஸுக்கு வேற வேல இல்லயா என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், அவர் வேலையை தானே செய்துக் கொண்டிருக்கிறார்.)

அப்போது தான் நான் தாஜ் ஓட்டலையும், இந்தியா கேட்டையும் பார்த்து முடித்திருந்தேன்.(அதனைப் பற்றி பிறகு விரிவாக விவரிக்கிறேன்.)

இப்போது கிளம்பினால் தான், இரண்டு மணிக்காவது மலாட் இரயில் நிலையத்திற்குச் சென்று சேர முடியும் என்பதால், உபர் புக் செய்து மீண்டும் சர்ச் கேட் இரயில் நிலையத்திற்குச் சென்றேன்.

என் அதிர்ஷ்டம், அந்த உபர் வண்டி டிரைவர் தமிழ் தெரிந்தவர்.

என்னைக் கண்டவுடன் நான் தமிழ் ஆள் என்பதனைத் தெரிந்துக்கொண்டார். அவரே பேச ஆரம்பித்தார். மும்பையைப் பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். நானும் அவரிடமிருந்து இன்னும் என்ன என்ன இடங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று தெரிந்துக் கொண்டேன். கொஞ்சம் இரசனையான ஆள் போன்று தான் தெரிந்தார். தூத்துக்குடி பக்கம் பூர்வீகம் என்றார்.

இருவரும் பேசிக்கொண்டே வந்ததில் மும்பை டிராபிக் ஜாம் என்னை கடுப்பேற்றவில்லை.

அப்போது தயா போனில் என்னை அழைத்தான்.

“என்னா டா”

“மும்பை எப்படி இருக்கு”

“நீ வரல ல தயா, அதனால நல்லா தான் இருக்கு”

“நீ வந்திருந்த, இந்நேரம் மும்பை நொந்து போயிருக்கும் தயா” என்று அவனை வம்புக்கு இழுத்தேன்.

ஊர் கதை, உலகக் கதை பேசி முடிப்பதற்குள் சர்ச் கேட் இரயில் நிலையம் வந்தடைந்தேன்.

டிக்கெட் எடுப்பதற்கு எவ்வளவு கூட்டம் என்று எரிச்சலாக இருந்தது. ஆனால், எனக்கு முன்னால், இரு பெண் சுற்றுலா பயணிகள் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்ததில் எனக்கு அங்கு நிற்பது பிரச்சனையாகத் தெரியவில்லை. அவர்கள் இருவரும் பார்ட்னர்ஸ் மாதிரி தெரிந்தது. (அப்படி என்றால் என்னவென்று தெரியாத நல்லவர்களுக்கு, அப்படி யாரேனும் இருந்தால், அவர்கள் லேஸ்பியன்ஸ்)

அவர்கள் இருவருக்கும் நல்ல கெமிஸ்டிரி இருந்தது.

“ஹலோ. ஐ யம் தேவ்” என்று அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். நான் இதுவரை, பெண்கள் இருவர் பார்ட்னராக இருப்பவர்களை சந்தித்ததில்லை. அதனால், அவர்களைப் பற்றி தெரிந்துக்கொள்வதற்கு ஆர்வமாக இருந்தேன்.

அவர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள். என்னுடன் நெருங்கிய நண்பர்களைப் போல உரையாடினார்கள். அவர்கள் விரார் இரயில் நிலையத்திற்கு டிக்கெட் எடுத்தார்கள். நான் மலாட் இரயில் நிலையத்திற்கு டிக்கெட் எடுத்தேன்.

மூவரும் பேசிக் கொண்டே இரயிலில் ஏறினோம். (நீங்கள் வேறு ஏதும் நடந்திருக்கும் என்று நினைத்தால், அதனை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை, அப்படினு சொன்ன இந்த உலகம் நம்மள நம்பவா போகுது. சரி ஏதோ நடத்துச்சுனு வெட்சிக்கொங்கோ. மை மைண்ட் வாய்ஸ்: வாய்ப்பு இல்ல ராசா. ஹா ஹா ஹா)

அவர்களிடம் பேச பேச நிறைய கற்றுக்கொண்டேன். அவர்களை இந்தியாவில் தவறாகப் பார்க்கிறார்கள் என்று வருத்தம் தெரிவித்தனர். எங்கள் ஊரில் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்றனர். அவர்கள் சொல்வதை நான் ஆமோதித்தேன்.

அவர்களுடன் பேசிக்கொண்டே வந்ததில் கோரேகான் இரயில் நிலையத்தை அடைந்திருந்தேன். என் பெட்டிக்கும் முதல் பெட்டியிலிருந்து காலையில் பார்த்த தேவி இரயிலை விட்டு இறங்குவதைப் பார்த்தேன். நான் என் இங்கிலாந்து நண்பிகளிடம் என் நம்பரைக் கொடுத்துவிட்டு, நானும் கோரேகான் இரயில் நிலைத்திலிருந்து கிளம்பிய இரயிலில் இருந்து குதித்து இறங்கினேன்.

தேவி வேகமாக என் முன்னே சென்றுக் கொண்டிருந்தாள். அவளிடன் பேச வேண்டும் என்று ஏன் தோன்றியது என இன்னமும் எனக்குத் தெரியவில்லை. காலையில் அவள் என்னைப் பார்த்ததிலிருந்து அவளுடன் பேச வேண்டும் என்று என் மனதிற்கு தோன்றிக் கொண்டேயிருந்தது. நான் சுற்றிப் பார்க்க போன இடங்களில் எல்லாம் அவளின் முகம் என் நினைவிற்கு வந்தது.

“ஹாய் தேவி. ஐ யம் தேவா” என்று அவளை அழைத்தேன்.

அந்த நேரம் பார்த்து இரயில் ஹாரன் அடித்ததில், நான் கூப்பிட்டது அவள் காதில் விழவில்லை. இரயில் தண்டவாளங்களைக் கடக்க நடைப்பாலத்தின் மீது ஏறினாள்.

அவள் வேகமாக நடந்துச் சென்றதால், அவளைப் பின் தொடர்வதில் எனக்கு சற்றே மூச்சு வாங்கியது. (இதெல்லாம் பார்த்தால் ஒரு பெண்ணை பிக்கப் செய்ய முடியுமா என்று நீங்கள் மனதில் நினைப்பது எனக்கு கேட்கிறது. நான் 90ஸ் கிட்ஸ் பாஸ், எனக்கும் வயசு ஆகுதுல.)

மீண்டும் அவளை அழைத்தேன்.

“ஹாய் தேவி. ஐயம் தேவா.” என்றேன்.

சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தாள்.

அவள் கண்கள் என் கண்களைப் பார்க்கும் போது எனக்கு ஜீவ் என்று இருந்தது.

ஆனால், அவள்…

இருபத்தி இரண்டாவது பகுதியின் லிங்க்…

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு