Saturday, April 20, 2024
Home > கவிதை > காதலைத்தவிர வேறொன்றுமில்லை…

காதலைத்தவிர வேறொன்றுமில்லை…

நான் அவளைத் தேடிச்செல்ல எனக்கு

தகுதியுமில்லை…

என்னை அவள் மன்னிக்கவும், ஏற்றுக்கொள்ளவும்

வாய்ப்புமில்லை…

அவள் என்மேல் கொண்டுள்ள கோபத்திலும் 

தவறுமில்லை…

அவளை மறக்க எவ்வளவு முயன்றாலும், அதில் எனக்கு 

வெற்றியுமில்லை…

என் கனவுகளிலும், என் நினைவுகளிலும் அவள் இல்லாமல்

இருந்ததுமில்லை..

எங்கள் காதலின் ஆழத்தை நான்

உணர்ந்ததுமில்லை…

என் தவறுகளை நினைத்து, பொறுப்பேற்று நான் வருந்தாத

நாளுமில்லை…

என் தவறுகளுக்காக என்னை மன்னிக்க நான்

தயாராகவுமில்லை…

என் தவறுகளுக்காக என்னை நான் தண்டித்துக்கொள்ளாத

நொடியுமில்லை…

அவள் போய்விட்டாள், என்னைத் தாண்டி நெடுந்தூரம், இனி அவள் திரும்ப

பாதையுமில்லை…

அவள் திரும்பிவந்தாளும், இச்சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ள

போவதுமில்லை…

வலியால் துடிப்பதைத் தவிர எனக்கு வேறு

வழியுமில்லை…

அவள் மேல் நான் கொண்டுள்ள காதல் 

மாறவுமில்லை…

இந்நாளும், எந்நாளும் அவளை நினைப்பதனைத் தவிர இனி எனக்கு

வேறொதுமில்லை…

என்னவள் திரும்பி வர வாய்ப்பில்லை என தெரிந்தும் காத்திருப்பதைப் போல

எனக்கு வேறு எந்த சுகமுமில்லை…

அவள் மேல் நான் கொண்டுள்ளது

காதலைத்தவிர வேறொன்றுமில்லை…

– உ.கா. 

ஜூன் 11 2019

காலை 08.18