Wednesday, November 20, 2019
Home > பெண்

கருப்பி… என் கருப்பி… – #சிறுகதை

என்னை வைத்து ருத்ரதாண்டவம் ஆடியிருந்தார் எனது மேனேஜர். எப்போதும் ரிவியூ மிட்டிங்கில் நான் எப்படியாவது தப்பிவிடுவேன். இந்த முறை கோபி பைய என்னை வசமாக சிக்க வைத்துவிட்டு ஓடிவிட்டான். நானும் அவனும் டீம் லீட்ஸ். நாங்கள் ஒரே கல்லூரி, ஒரே வகுப்பு. இருந்தாலும் இந்த நிறுவனத்தில், நான் அவனுக்கு சீனியர். ஆனால், அவன் சம்பள விசியத்தில் எனக்கு சீனியர். வேலையில் படு கில்லி. இந்த முறை ஏதோ வசமாக சொதப்பிவிட்டான்.

Read More

நான் மறைத்த #MeToo

#MeToo என்ற பெயரில் பாலியல் அத்துமீறல்கள் பற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது சமூக வலைதளங்களில் புகார்களை தெரிவித்து வருகின்றனர். அதில் பலர் நாம் வாழும் சமுதாயத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்கள். அரசியல், விளையாட்டு, கல்விக்கூடங்கள், சினிமா, கார்பரேட் நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும், எல்லா மட்டங்களிலும் இப்படியான குற்றச்சாட்டுகள் பல வெளிவந்திருக்கின்றன. இன்னும் மறைக்கப்பட்ட சம்பவங்கள் கவலைப்படும் அளவிற்கு மிகமிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அப்படி, நான் மறைத்த ஒரு பாலியல்

Read More

இன்று அவளுக்குப் பிறந்தநாள்…

”நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் அப்டினா என்ன மாமா? கெட்ட தொடுதல் அப்டினா கற்பழிக்கிறதா மாமா?” என்று என் அக்கா மகள் என்னிடம் கேட்டாள். என் அக்கா மகள், தேவிகாவின் மூன்றாவது பிறந்தநாள் விழாவிற்குக்காக நெருங்கிய நலம் விரும்பிகளை மாமா அழைத்திருந்தார். அப்போது பலர் வருவார்கள் என்பதால், என் அக்கா அவளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு அருகிலேயே நான் தோரணம் கட்டிக்கொண்டிருந்தேன். விருந்தினர் வருவதற்குள் அக்கா அவளுக்குச்

Read More

கண்ணம்மா… போயிட்டியே என்னிடம் சொல்லாமல்…

நெடுநாட்களாக மனதை வருடிக்கொண்டிருந்த ஒரு அநீதியைப் பற்றியே இக்கட்டுரை. இந்த அநீதி நிகழும் பொழுது, என்னால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அதனை நினைத்து நினைத்து, என் தலையனையில், பல நாட்கள் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். என்னை மிகவும் பாதித்த அந்த சம்பவம் இதோ, ஒரு நாள் என் பெரியப்பா, மிகவும் பதற்றமாக என் தந்தையைக் காண வந்திருந்தார். அவர் வீட்டில் இல்லாததால், என்னிடம் சிறிது நேரம் நாட்டு நடப்புகளைப் பேசிவிட்டுச் சென்றார். மாலையில் வந்த

Read More

சபரிமலையும் பெண்களும்

“மாதவிடாய் காலங்களில் எங்களது நாப்கினை பயன்படுத்தினால், நீளம் தாண்டலாம், உயரம் தாண்டலாம், நேடுந்தூரம் ஓடலாம், ஆடிப்பாடி விளையாடலாம் என்று விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள்.... சுத்தமான எங்கள் நாப்கினை பயன்படுத்தினால், கோவில்களில் விளக்கேற்றலாம்... திருமணங்களுக்குச் செல்லலாம்... பிற மங்கல காரியங்களில் ஈடுபடலாம்... பிறர் வீட்டிற்கு சுக, துக்கங்களுக்குச் செல்லலாம்... என்று விளம்பரம் தருவார்களா?” என்று ஒரு பெண் கவிஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வினா எழுப்பியிருந்தார். ஆழமான கேள்வி, இந்தக்கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்களை நாம் சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. அதில்

Read More